தட்டச்சு பள்ளி உரிமையாளர்கள் ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்
தட்டச்சு பள்ளி உரிமையாளர்கள் ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்
UPDATED : ஜூன் 13, 2025 12:00 AM
ADDED : ஜூன் 13, 2025 08:04 AM
 சென்னை:
தட்டச்சு தேர்வுகள் கணினி வாயிலாக மட்டுமே நடத்தப்படும் என்ற அரசாணையை திரும்பப் பெற வலியுறுத்தி, தமிழ்நாடு வணிகவியல் பள்ளிகள் சங்கம் சார்பில், சென்னையில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில், 1,600க்கும் மேற்பட்ட, தட்டச்சு பள்ளி உரிமையாளர்கள் மற்றும் தட்டச்சு ஆசிரியர்கள் பங்கேற்றனர்.
இதுகுறித்து, சங்கத்தின் தொடர்பு அலுவலர் ரவிச்சந்திரன் கூறியதாவது:
கடந்த ஆண்டு, அக்., 28ம் தேதி வெளியான தமிழக அரசாணையில், 2026ம் ஆண்டு வரை, தட்டச்சு இயந்திரங்கள் வாயிலாக தட்டச்சு தேர்வுகள் நடத்தப்படும். 2027ம் ஆண்டு முதல், கணினி வாயிலாக மட்டுமே தட்டச்சு தேர்வுகள் நடத்தப்படும் என கூறப்பட்டுள்ளது.
அரசின் இந்த அறிவிப்பால், தட்டச்சு பள்ளிகளில் பணியாற்றும் 5 லட்சத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்துஉள்ளனர். மேலும், 2,000 தட்டச்சு கருவி மெக்கானிக்குகளும் பாதிக்கப்படுவர்.
எனவே, கணினி வாயிலாக தட்டச்சு தேர்வு எழுதும் அறிவிப்பை ரத்து செய்ய வேண்டும். தனியாரை ஊக்குவிக்காமல், அரசு அங்கீகாரம் பெற்ற தட்டச்சு பள்ளிகளுக்கு, தொடர்ந்து முன்னுரிமை வழங்கி, இயந்திரங்கள் வாயிலாக தட்டச்சு தேர்வு எழுதுவதை தொடர வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.

