UPDATED : ஜூலை 10, 2025 12:00 AM
ADDED : ஜூலை 10, 2025 05:45 PM

சென்னை:
நடப்பு ஆண்டில் இன்ஜினியரிங் முடித்த மாணவர்களுக்கு தற்காலிக சான்றிதழ் தராததால் வெளிநாடுகளுக்கு உயர்கல்விக்கு செல்ல முடியவில்லை என அண்ணாபல்கலை மீது மாணவர்கள் குற்றம் சாட்டி உள்ளனர்.
அண்ணா பல்கலைக்கழகம் இதுவரை தற்காலிக சான்றிதழ் மற்றும் கன்சாலிடேட்டட் மதிப்பெண் சான்றிதழ் ஆகியவற்றை மாணவர்களுக்கு வழங்கப்படவில்லை. இதனால் வெளிநாட்டு பல்கலைக்கழகங்களில் சேர வேண்டிய மாணவர்கள் சேர முடியாமல் தவித்து வருகின்றனர்.
கன்சாலிடேட்டட் மதிப்பெண் சான்றிதழ் இல்லாமல், தங்கள் கல்வியை முழுமையாக நிரூபிக்க இயலாத நிலை உருவாகியுள்ளது. பல்கலைக்கழக நிர்வாகம் தங்களது தாமதத்திற்கு தெளிவான விளக்கம் வழங்காமல், மாணவர்களின் எதிர்காலத்தை புறக்கணிப்பது பெற்றோர்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு உரிய நடவடிக்கை எடுக வேண்டும் என்பதே மாணவர்கள் மற்றும் பெற்றோர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.