ஹங்கேரிய எழுத்தாளருக்கு இலக்கியத்துக்கான நோபல் பரிசு
ஹங்கேரிய எழுத்தாளருக்கு இலக்கியத்துக்கான நோபல் பரிசு
UPDATED : அக் 10, 2025 10:16 AM
ADDED : அக் 10, 2025 10:16 AM
ஸ்டாக்ஹோம்:
ஹங்கேரிய எழுத்தாளர் லாஸ்லோ கிரஸ்நாஹொர்காய், அவரது 'ஹெர்ஷ்ட் 07769' என்ற ஜெர்மன் மொழி நாவலுக்காக இந்த ஆண்டின் இலக்கியத்துக்கான நோபல் பரிசுக்கு தேர்வு செய்யப் பட்டுள்ளார்.
ஐரோப்பிய நாடான ஸ்வீடனைச் சேர்ந்த வேதியியலாளரும், தொழிலதிபருமான ஆல்பிரட் நோபல் பெயரில் ஆண்டுதோறும் நோபல் பரிசுகள் வழங்கப்படுகின்றன.
இந்தாண்டுக்கான விருது அறிவிப்புகள் வெளியிடப்பட்டு வருகின்றன. மருத்துவம், இயற்பியல், வேதியியல் துறைகளுக்கான நோபல் பரிசு ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில், இலக்கியத்துக்கான நோபல் பரிசு நேற்று அறிவிக்கப்பட்டது. ஹங்கேரியைச் சேர்ந்த எழுத்தாளர் லாஸ்லோ கிரஸ்நாஹொர்காய் இந்தாண்டு இலக்கியத்துக்கான நோபல் பரிசை பெறுகிறார்.
இவர், 'ஹெர்ஷ்ட் 07769' என்ற பெயரில் ஜெர்மன் மொழியில் எழுதி வெளியிட்ட நாவலுக்காக இந்த விருதை பெற உள்ளார் . இவர், தத்துவ ஆழமிக்க எழுத்துகளுக்காக புகழ்பெற்றவர்.