கல்வி அலுவலர் பணியிடம் தலைமையாசிரியர்கள் தீர்மானம்
கல்வி அலுவலர் பணியிடம் தலைமையாசிரியர்கள் தீர்மானம்
UPDATED : அக் 14, 2025 07:36 AM
ADDED : அக் 14, 2025 07:37 AM

மதுரை:
'மதுரையில் கள்ளர் சீரமைப்பு துறை அலுவலகத்தில் 6 ஆண்டுகளாக காலியாக உள்ள கல்வி அலுவலர் பணியிடத்தை நிரப்ப வேண்டும் உள்ளிட்ட கோரிக்கையை வலியுறுத்தி 3 கட்ட போராட்டம் நடத்தப்படும்' என தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலை தலைமையாசிரியர்கள் சங்கம் தீர்மானம் நிறைவேற்றியது.
மதுரையில் இச்சங்க பொதுக்குழுக் கூட்டம் தலைவர் மணிவண்ணன் தலைமையில் நடந்தது. மாநில அமைப்பு செயலாளர் நவநீதகிருஷ்ணன், மாவட்ட செயலாளர் மதிவாணன், பொருளாளர் சாம்ராஜ், அமைப்பு செயலாளர் புதியாசலம், மகளிரணி செயலாளர் பாக்கிய சித்ரா பங்கேற்றனர். 6 ஆண்டுகளாக காலியாக உள்ள கல்வி அலுவலர் பணியிடத்தை நிரப்ப வேண்டும், பொது மாறுதல், பதவி உயர்வு கலந்தாய்வு வேண்டும், அனைத்து மேல்நிலை பள்ளிகளிலும் 9 பி.ஜி., ஆசிரியர் பணியிடங்கள் உருவாக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதை வலியுறுத்தி அக்.29 முதல் ஆர்ப்பாட்டம், உண்ணாவிரதம், தற்செயல் விடுப்பு என மூன்றுகட்ட போராட்டம் நடத்துவது என முடிவு எடுக்கப்பட்டது.