sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/சிறப்பு ஆசிரியர் பணியிடங்கள் எப்போதுதான் நிரப்பப்படும்?

சிறப்பு ஆசிரியர் பணியிடங்கள் எப்போதுதான் நிரப்பப்படும்?

சிறப்பு ஆசிரியர் பணியிடங்கள் எப்போதுதான் நிரப்பப்படும்?


UPDATED : டிச 04, 2025 07:53 AM

ADDED : டிச 04, 2025 07:54 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : டிச 04, 2025 07:53 AM ADDED : டிச 04, 2025 07:54 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கோவை:
ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்டத்தின் கீழ் செயல்படும் 'உள்ளடக்கிய கல்வி' பிரிவில், காலியாக உள்ள சிறப்பு ஆசிரியர் பணியிடங்களை விரைந்து நிரப்ப வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

மாவட்டத்தில், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், ஒன்றாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை சுமார் 3,500-க்கும் மேற்பட்ட மாற்றுத்திறன் மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். இவர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்க, சிறப்பு கல்வியியல் பட்டம் மற்றும் பட்டயம் பெற்ற பயிற்றுநர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாவட்டத்தில் உள்ள 15 வட்டாரங்களில், ஒவ்வொரு வட்டாரத்திற்கும் சராசரியாக 5 முதல் 6 பயிற்றுநர்கள் வீதம் இருக்க வேண்டும். ஆனால், 64 சிறப்பு பயிற்றுநர்கள் மற்றும் 9 இயன்முறை மருத்துவர்கள் (பிசியோதெரபிஸ்ட்) பணியில் உள்ளனர். அனுமதிக்கப்பட்ட இடங்களில் இன்னும் 28 சிறப்பு ஆசிரியர் பயிற்றுநர் பணியிடங்கள் காலியாக உள்ளன.

சிறப்பு பயிற்றுநர்கள் மாணவர்களுக்கு பாடம் கற்பிப்பது மட்டுமின்றி, அவர்களுக்கு தேசிய அடையாள அட்டை பெற்றுத் தருவது, தேவையான உதவி உபகரணங்களை பெற பரிந்துரைப்பது உள்ளிட்ட பல்வேறு களப்பணிகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.

பற்றாக்குறை காரணமாக இப்பணிகளை முழுமையாக செய்வதில் சிக்கல் எழுந்துள்ளதாக கூறப்படுகிறது.

சிறப்பு பயிற்றுநர்கள் கூறுகையில், 'தற்போதுள்ள குறைவான எண்ணிக்கையை வைத்துக்கொண்டு, 15 வட்டாரங்களில் உள்ள பள்ளிகள் மற்றும் பகல் நேரப் பராமரிப்பு மையங்களுக்குச் சுழற்சி முறையில் சென்று வருகிறோம். வாரத்திற்கு இரு முறை பள்ளிகளுக்கு செல்கிறோம். காலியாக உள்ள இடங்களை நிரப்பினால் மட்டுமே, ஒவ்வொரு மாணவர் மீதும் தனித்தனிக் கவனம் செலுத்த முடியும்,' என்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us