UPDATED : ஜன 15, 2026 10:32 AM
ADDED : ஜன 15, 2026 10:33 AM
கோவை:
பேரூர் உள்ளிட்ட வட்டாரப் பள்ளிகளில் தொடக்கக் கல்வி இயக்குனர் நரேஷ் ஆய்வு செய்தார். மாணவர்களின் வாசிப்புத் திறன், எண்ணும் எழுத்தும் பயிற்சி, ஸ்லாஸ் (மாநில கற்றல் அடைவு) மற்றும் திறன் பயிற்சி ஆகியவற்றை ஆய்வு செய்தார். இதன் பின், வருவாய் மாவட்ட வட்டாரக் கல்வி அலுவலர்கள், மாவட்ட கல்வி அலுவலர்களுக்கான ஆய்வு கூட்டம் நடைபெற்றது.
தொடக்கக் கல்வி இயக்குனர் நரேஷ் கூறியதாவது:
கோவை பள்ளி மாணவர்களின் தேர்ச்சி விகிதத்தை உயர்த்த நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. வட்டாரக் கல்வி அலுவலர்களுக்கான ஆய்வு கூட்டத்தில் இதை மீண்டும் வலியுறுத்தியுள்ளோம்.
மாணவர்களின் வருகை குறையாமல் இருக்க, மாணவர்கள் காலதாமதமாக வந்தால், வருகை பதிவில் 'பிரசன்ட்' என பதிவு செய்ய கூடாது. பள்ளி என்பது ஒழுக்கத்தை கற்றுத்தரும் இடமாக இருக்க வேண்டும். அதனால், ஆசிரியர்கள் வருகை பதிவை பராமரிப்பதில் கண்டிப்புடன் செயல்பட வேண்டும் என பள்ளி ஆய்வில் அறிவுறுத்தியுள்ளேன்.
இவ்வாறு, அவர் கூறினார்.

