UPDATED : ஜன 16, 2026 09:21 PM
ADDED : ஜன 16, 2026 09:22 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு:
சித்தோடு, அரசினர் பொறியியல் கல்லுாரி சாலை, வாசவி கல்லுாரி அருகே கனரா வங்கி கிராமப்புற சுயவேலைவாய்ப்பு பயிற்சி நிலையம் செயல்படுகிறது. இங்கு, பெண்களுக்கான இலவச அழகுக்கலை பயிற்சி வரும், 27 முதல் மார்ச், 7 வரை, 35 நாட்கள் நடக்க உள்ளது.
பயிற்சி, சீருடை, பயிற்சி உபகரணங்கள், உணவு ஆகியவை இலவசம். பயிற்சி நிறைவில் அரசு சான்றிதழ் வழங்கப்படும். ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த, 19 முதல், 45 வயதுக்கு உட்பட்டவர்கள், வறுமை கோட்டுக்கு கீழ் உள்ளோர், 100 நாள் வேலை திட்ட பணியாளர்கள், அவர்களது குடும்பத்தாருக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
விருப்பம் உள்ளோர், 0424 2400338, 87783 23213 என்ற எண்ணில் முன்பதிவு செய்து பயிற்சி பெறலாம்.

