தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/பழைய கற்கால கருவிகள் நாமக்கல்லில் கண்டெடுப்பு

பழைய கற்கால கருவிகள் நாமக்கல்லில் கண்டெடுப்பு

பழைய கற்கால கருவிகள் நாமக்கல்லில் கண்டெடுப்பு


UPDATED : பிப் 19, 2026 11:37 AM

ADDED : பிப் 19, 2026 11:38 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : பிப் 19, 2026 11:37 AM ADDED : பிப் 19, 2026 11:38 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை:
நாமக்கல் பகுதியில், பழைய கற்கால கருவிகள் கண்டெடுக்கப்பட்டு உள்ளன.

சென்னை பல்கலையின் பண்டைய வரலாறு மற்றும் தொல்லியல் துறையில் படித்த முன்னாள் மாணவர்கள் பாரத் கிருஷ்ணமூர்த்தி, பிரகதீஸ்வரன், ஹிருத்திக்ராஜா, ஸ்ரீஹரி, சூரியதமிழன் ஆகியோர், நாமக்கல் மாவட்டத்தில் உள்ள சருகுமலை, தலமலை, சித்தர்மலை ஆகிய பகுதிகளில், தொல்லியல் கள ஆய்வில் ஈடுபட்டனர்.

அப்போது, மலைகளின் அடிவாரத்தில், 'குவார்ட்ஸ்' எனும், வழுவழுப்பான வெள்ளை படிவுபாறைகளில் செதுக்கப்பட்ட கற்கருவிகளை கண்டெடுத்தனர்.

இது குறித்து அவர்கள் கூறுகையில், “திருவள்ளூர் மாவட்டத்தில் அதிகளவில் கற்கால கருவிகள் கிடைத்துள்ளன. அவற்றில் பழைய கற்கால கருவிகளின் காலம், 17 லட்சம் ஆண்டுகள் என வரையறுக்கப்பட்டுள்ளது.

தற்போது மாணவர்கள் கண்டெடுத்துள்ள இந்த 'குவார்ட்ஸ்' வகை கற்கருவிகளும், அதே காலகட்டத்தைச் சேர்ந்ததாக இருக்கலாம் என, சென்னை பல்கலை பண்டைய வரலாறு மற்றும் தொல்லியல் துறை பேராசிரியர் ஜினுகோஷி கூறியுள்ளார்,” என்றனர்.


தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us