sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், ஏப்ரல் 15, 2026 ,சித்திரை 2, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

சத்தியமங்கலம் காமதேனு கல்வியியல் கல்லுாரி சாதனை

/

சத்தியமங்கலம் காமதேனு கல்வியியல் கல்லுாரி சாதனை

சத்தியமங்கலம் காமதேனு கல்வியியல் கல்லுாரி சாதனை

சத்தியமங்கலம் காமதேனு கல்வியியல் கல்லுாரி சாதனை


UPDATED : மார் 26, 2026 06:39 PM

ADDED : மார் 26, 2026 06:41 PM

Google News

UPDATED : மார் 26, 2026 06:39 PM ADDED : மார் 26, 2026 06:41 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சத்தியமங்கலம்:
சத்தியமங்கலம், காமதேனு கல்வியியல் கல்லூரி, நுண்ணிலை கற்பித்தல் திறன்களில் சிறப்பான சாதனையை நிகழ்த்தியுள்ளது.

சிறந்த கற்பித்தலுக்கான அடித்தளமாக விளங்கும், இந்த நுண்ணிலை கற்பித்தல் திறன்களை அடிப்படையாகக் கொண்டு, இது வரை எந்த கல்வியியல் கல்லூரியும் மேற்கொள்ளாத வகையில் ஒரு சாதனை நிகழ்வு நடத்தப்பட்டுள்ளது.

இந்த சாதனையில், பாடம் தொடங்கும் திறன், விளக்குதல் திறன், பல்வகை தூண்டல் திறன், வலுவூட்டிகளை பயன்படுத்தும் திறன், எடுத்துக்காட்டுகளை வழங்கும் திறன், வினாக்கள் கேட்கும் திறன் மற்றும் கரும்பலகை பயன்படுத்தும் திறன் ஆகிய ஏழு நுண்ணிலை கற்பித்தல் திறன்கள் இடம்பெற்றன.

மொத்தம் 327 பி.எட்., மாணவர்கள் காலை 11:00 மணி முதல் மாலை 05:31 மணி வரை எந்த இடைவெளியும் இன்றி தொடர்ச்சியாக இந்த திறன்களை செயல்படுத்தி காட்டினர். இந்நிகழ்வு, இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ் மற்றும் ஆசியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ் அமைப்புகளால் சாதனையாக அங்கீகரிக்கப்பட்டு, சான்றிதழ்கள் மற்றும் பதக்கங்கள் வழங்கப்பட்டன.

இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ் சார்பான பதக்கம் மற்றும் சான்றிதழ் கல்லூரி முதல்வர் ராம்பிரபுவிற்கு வழங்கப்பட்டது. ஆசியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ் சார்பாக பதக்கம் மற்றும் சான்றிதழ் கல்லூரி தலைவர் பெருமாள்சாமிக்கு வழங்கப்பட்டது.

சாதனை அறிவிப்பு நிகழ்வில், கல்லூரியின் இணை செயலாளர் மலர் செல்வி மற்றும் முதன்மையர் நிர்மலா ஆகியோர் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us