UPDATED : மார் 28, 2026 05:01 PM
ADDED : மார் 28, 2026 05:03 PM
உடுமலை:
தேசிய திறனாய்வு தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு, சின்னவீரம்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
உடுமலை ஒன்றியம், சின்னவீரம்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி மாணவ, மாணவியருக்கு பல்வேறு சிறப்பு திறன்களுக்காக பயிற்சி வழங்கப்படுகிறது. அவ்வகையில், இப்பள்ளி மாணவ, மாணவியர் தேசிய திறனாய்வு தேர்வில் பங்கேற்றனர்.
இதில், மாணவியர் பிரியதர்ஷினி, ஸ்ரீநிதி, சூசன்செனோரிடா, கார்த்திகா ஆகியோர் நல்ல மதிப்பெண்கள் பெற்று தேசிய திறனாய்வு தேர்வில் வெற்றி பெற்றனர். இவர்களை பள்ளி தலைமையாசிரியர், ஆசிரியர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் பாராட்டினர்.
அதே போல், அரசு மாதிரி பள்ளியில் படிக்க அஸ்வின், பிரியதர்ஷினி, ஸ்ரீநிதி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
திறனாய்வு தேர்வில் வெற்றி பெற்றவர்கள் மற்றும் மாதிரி பள்ளிக்கு தேர்வு செய்யப்பட்டவர்கள், கல்வி சுற்றுலாவாக ஊட்டி அழைத்து செல்லப்பட உள்ளதாக, பள்ளி நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.

