தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/செயின்ட் ஜோசப் கல்லுாரி பட்டமளிப்பு விழா

செயின்ட் ஜோசப் கல்லுாரி பட்டமளிப்பு விழா

செயின்ட் ஜோசப் கல்லுாரி பட்டமளிப்பு விழா


UPDATED : மார் 29, 2026 12:52 PM

ADDED : மார் 29, 2026 12:54 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மார் 29, 2026 12:52 PM ADDED : மார் 29, 2026 12:54 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கடலூர்:
கடலூர் செயிண்ட் ஜோசப் கலை, அறிவியல் கல்லூரியில் 32வது பட்டமளிப்பு விழா நடந்தது.

விழாவில் சென்னை ஐகோர்ட் நீதிபதி நிர்மல்குமார், சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். ஆயிரத்து 300 மாணவ, மாணவிகளுக்கு பட்டமளித்தார்.

அவர் பேசியதாவது:


பெற்றோரால் தான் நீங்கள் இந்த உயர்ந்த நிலைக்கு வந்துள்ளீர்கள். நம் வாழ்க்கையில் எதை வேண்டுமானாலும் கல்வியால் பெற்றுக்கொள்ள முடியும்.

கல்வியை எக்காரணத்தை முன்னிட்டும் கைவிடக்கூடாது. கல்வி ஒரு மனிதனுக்கு சமுதாயத்தில் வலிமையை தருகிறது.

பொருள் செல்வத்தை பிறர் எடுத்துக் கொள்ளலாம் ஆனால் பெற்ற கல்வியை உங்களிடமிருந்து யாரும் எடுத்துக்கொள்ள முடியாது.

இன்று நீங்கள் பெறும் பட்டம் ஒரு காகிதம் அல்ல. அது சமுதாயத்தில் நிலவும் ஏழ்மை மற்றும் பல்வேறு பாகுபாடுகளை கலைந்தெறியும் ஒரு மிகப் பெரிய ஆயுதம்.

இவ்வாறு அவர் பேசினார்.

கல்லூரி செயலாளர் சுவாமிநாதன் தலைமை தாங்கினார். கல்லூரி முதல்வர் அருமைசெல்வம் ஆண்டறிக்கை வாசித்தார்.

மூத்த துணைமுதல்வர் ஜோன் ஆரோக்கியராஜ், தேர்வு கட்டுப்பாட்டு நெறியாளர் சேவியர், கல்லூரியின் கல்விப்புல முதன்மையர் அலெக்ஸ், இணை கல்விப்புல முதன்மையர் சார்லஸ் எடிசன், முன்னாள் மாணவ ஒருங்கிணைப்பாளர் மரிய ஆனந்தராஜ், துணைமுதல்வர்கள் சவரிமுத்து, வித்யா, ஜேம்ஸ்மேரி மற்றும் துறைத் தலைவர்கள், பேராசிரியர்கள், அலுவல ஊழியர்கள், மாணவர்கள் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us