UPDATED : மார் 29, 2026 10:34 PM
ADDED : மார் 29, 2026 10:35 PM
'தினமலர்' வழிகாட்டி நிகழ்ச்சி, சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் நடந்தது.
அதில், 'ட்ரோன்' தொழில் நுட்பம் குறித்து எம்.ஐ.டி., சென்னை பேராசிரியர் செந்தில்குமார் பேசியதாவது:
'ட்ரோன்'களின் பிறப்பிடம் தமிழகம். நாட்டில் முதன் முதலாக, 'ட்ரோன்' கண்டுபிடித்து, அமெரிக்காவில் நடந்த போட்டியில் பங்கேற்று, பரிசு பெற்றோம். தமிழகத்தில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஆட்சியில், 25 கோடி ரூபாய் நிதி ஒதுக்கினார்.
அதை வைத்து, பல்வேறு ஆராய்ச்சிகளை செய்தோம். அதன் பின், நாட்டின் பல்வேறு இடங்களில், 'ட்ரோன்' குறித்த தொழில்நுட்பம் பரவியது. அந்த வகையில், தமிழகமே ட்ரோன்களின் பிறப்பிடம் என்பதில் பெருமை.
என் தலைமையில் உருவாக்கப்பட்ட, 'ட்ரோன்' ஆப்பரேஷன் சிந்துாரில் சிறப்பாக பங்காற்றியது. அதற்காக, மத்திய அரசு எங்களை அழைத்து கவுரவித்தது. நாட்டிற்காக பங்காற்றுவதில், ட்ரோன்களின் பங்கு முக்கியத்துவம் வாய்ந்துள்ளது. வரும் காலத்தில் ட்ரோன்களின் எதிர்காலம், மேலும் சிறப்பாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.
இவ்வாறு அவர் பேசினார்.
