தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/அரசு பள்ளிகள் திறப்பு: மாணவர்கள் உற்சாகம்

அரசு பள்ளிகள் திறப்பு: மாணவர்கள் உற்சாகம்

அரசு பள்ளிகள் திறப்பு: மாணவர்கள் உற்சாகம்


UPDATED : ஏப் 02, 2026 04:57 PM

ADDED : ஏப் 02, 2026 04:59 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஏப் 02, 2026 04:57 PM ADDED : ஏப் 02, 2026 04:59 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி:
மாநிலத்தில் உள்ள அரசு சி.பி.எஸ்.இ., பள்ளிகளில் 1 முதல் 8ம் வகுப்பு வரை பயின்ற மாணவர்கள் அனைவரும் 'ஆல் பாஸ்' செய்யப்பட்டு, அடுத்த வகுப்பிற்கு தேர்ச்சி பெற்றனர். தொடர்ந்து, 2026 - 27ம் கல்வியாண்டிற்கான வகுப்புகள் நேற்று திறக்கப்பட்டு, செயல்பாட்டிற்கு வந்தன.

புதுச்சேரி நீடராஜப்பர் வீதியில் உள்ள சவரி ராயலு நாயக்கர் அரசு பள்ளியில், எல்.கே.ஜி., முதல் 9ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு நேற்று வகுப்புகள் துவங்கின. முதல் நாள் பள்ளிக்கு வந்த எல்.கே.ஜி., மழலையர் மாணவர்களை வரவேற்கும் விதமாக, பன்னீர் தெளித்து, வண்ண பலுான்கள் மற்றும் இனிப்புகள் வழங்கப்பட்டன. மாணவர்கள் உற்சாகத்துடன் பள்ளிக்கு வந்தனர்.

தலைமை ஆசிரியர் வரலட்சுமி தலைமையில், ஆசிரியர்கள் கெஜலட்சுமி, வள்ளி, ரஞ்சனி, சோனியா, கயல்விழி மற்றும் அருணா ஆகியோர் மாணவர்களை வரவேற்று வகுப்பறைக்கு அழைத்துச் சென்றனர்.

அதே போல், தனியார் சி.பி.எஸ்.இ., பள்ளிகள் திறக்கப்பட்டு, மாணவர்கள் பள்ளிக்கு வந்தனர். பள்ளிகள் வரும் 30ம் தேதி வரை இயங்கும். தொடர்ந்து, மே 1ம் தேதி முதல் 31ம் தேதி வரை, கோடை விடுமுறை அளிக்கப்பட்டு, மீண்டும் ஜூன் 1ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என, பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us