விழுப்புரம் அரசு கல்லுாரியில் கணிதத்துறை கருத்தரங்கம்
விழுப்புரம் அரசு கல்லுாரியில் கணிதத்துறை கருத்தரங்கம்
UPDATED : ஏப் 03, 2026 06:47 PM
ADDED : ஏப் 03, 2026 06:49 PM
விழுப்புரம்:
விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் கணிதவியல் துறை சார்பில் ஆராய்ச்சி கருத்தரங்கம் நடந்தது.
அரசு கலைக் கல்லுாரியின் இளநிலை, முதுநிலை மற்றும் ஆராய்ச்சி மாணவர்களுக்கு, சர்வதேச அளவில் கணிதத்துறை மேம்பாடு மற்றும் பயன்பாடுகள் ஆராய்ச்சி என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடந்தது.
கருத்தரங்கிற்கு கல்லுாரி முதல்வர் சிவக்குமார் தலைமை தாங்கினார். கணிதவியல் துறைத் தலைவர் லட்சுமிநாராயணன் முன்னிலை வகித்தார். துறை பேராசிரியர் பரமேஸ்வரி வரவேற்றார். முனைவர் ரவீந்திரன், எழிலரசி துவக்க உரையாற்றினர்.
மலேசியா பெட்ரோனஸ் பல்கலைக்கழக அடிப்படை மற்றும் பயன்பாட்டு அறிவியல் துறைத் தலைவர் மோகனசுந்தரம் முத்துவேலு சிறப்புரையாற்றினார்.
விருதாசலம் விநாயகா கலை அறிவியல் கல்லுாரி பேராசிரியர் கணேசன் உள்ளிட்டோர் கருத்துரை வழங்கினர். 200க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் பங்கேற்றனர். பேராசிரியர் அருள்மணி நன்றி கூறினார்.

