UPDATED : ஏப் 09, 2026 07:51 AM
ADDED : ஏப் 09, 2026 07:53 AM

சென்னை:
ஒவ்வொரு ஆண்டும் மூன்று முறை தேர்வு நடத்திய, இந்திய பட்டய கணக்காளர் நிறுவனம், அதை இரண்டாக குறைத்துள்ளது.
இந்திய பட்டய கணக்காளர்கள் நிறுவனமான, ஐ.சி.ஏ.ஐ., பட்டய கணக்காளர் தேர்வில் மாற்றங்களை செய்துள்ளது. அதன்படி, ஜனவரி, மே, செப்டம்பர் மாதங்களில் நடத்தப்பட்டு வந்த, பட்டய கணக்காளர் தேர்வுகள், இனி, மே, நவம்பர் மாதங்களில் மட்டும் நடத்தப்படும்.
இது குறித்து, அந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கை:
இந்த ஆண்டு முதல் மாணவர்கள், பேராசிரியர்கள் மற்றும் தொழில்துறை பிரதிநிதிகள் தொடர்ச்சியாக வலியுறுத்தியதை ஏற்று, இரண்டு இறுதித் தேர்வுகளை மட்டும் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதனால், தேர்வுக்கான தயாரிப்பு, திருப்புதல், திட்டமிடல் உள்ளிட்ட செயல்பாடுகளில், நிதானத்துடன் செயல்படுவதுடன், அடிக்கடி தேர்வு எழுதுவதால் ஏற்படும் சோர்விலிருந்தும் விடுவிக்கப்படுவர். மாணவர்களால் கருத்து தெளிவு, ஆழமான ஆய்வு ஆகியவற்றில் கவனம் செலுத்த முடியும்.
இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

