UPDATED : ஏப் 09, 2026 12:34 PM
ADDED : ஏப் 09, 2026 12:36 PM
பெருந்துறை:
பெருந்துறை அடுத்த, விஜயமங்கலம் பாரதி இன்டர்நேஷனல் மேல்நிலைப் பள்ளி ஆண்டு விழா நடந்தது.
பள்ளி நிறுவனர் மோகனாம்பாள் தலைமை வகித்தார். தாளாளர் செந்தில்குமார் முன்னிலை வகித்தார். பள்ளி தலைவர் உமாதேவி வரவேற்றார். முதல்வர் ரீனா உமாசங்கர் ஆண்டறிக்கை வாசித்தார்.
விழாவில், சிறப்பு விருந்தினராக தனியார் தொலைக்காட்சி தொகுப்பாளர் கல்யாணி கலந்து கொண்டு, பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசு வழங்கினார்.
மேலும் விழாவில், சென்ற ஆண்டு நடைபெற்ற சி.பி.எஸ்.இ., 10 மற்றும் 12ம் வகுப்பு அரசு பொதுத் தேர்வில் முதலிடம் பிடித்த மாணவ மாணவிகளுக்கு பரிசு வழங்கப்பட்டது. அவர்களது பெற்றோர்கள் கவுரவிக்கப்பட்டனர்.
விழாவில், பாரதி உற்சவ் - 26 அவ்வை சொல்லும் அமுத மொழியும் என்ற தலைப்பில், தமிழர்களின் பெருமையை பறை சாற்றும் விதத்தில், ஆத்திச்சூடி வரிகளில் நடனங்கள் மற்றும் கலை நிகழ்ச்சி திருவிழா போல் நடைபெற்றது.
பெற்றோர், மாணவர்கள், பொதுமக்கள் என அனைவரையும் பெரிதும் கவரும் வகையில், மாணவர்கள் தங்கள் கலைத் திறமையை வெளிப்படுத்தினர். விழாவில், மாணவர்களின் சாதனைக்காக வித்திட்ட ஆசிரியர்களுக்கு பாராட்டும், பரிசும் வழங்கி கவுரவிக்கப்பட்டனர்.

