UPDATED : ஏப் 11, 2026 11:03 PM
ADDED : ஏப் 11, 2026 11:05 PM
மேட்டுப்பாளையம்:
மேட்டுப்பாளையம் எஸ்.எஸ்.வி.எம், சி.பி.எஸ்.இ., பள்ளியில் டெட் எக்ஸ் எஸ்.எஸ்.வி.எம்., யூத் 2026 என்ற அறிவு சார் மாநாடு நடந்தது.
நிகழ்ச்சிக்கு பள்ளியின் தாளாளர் மணிமேகலை மோகன் தலைமை வகித்து துவக்கி வைத்து பேசுகையில், “எதிர்கால தலைவர்களை உருவாக்குவதில், இத்தகைய மேடைகள் முக்கிய பங்காற்றும்,” என்றார்.
செயலாளர் மோகன்தாஸ், எஸ்.எஸ்.வி.எம்., கல்வி நிறுவனங்களின் இயக்குனர் ஸ்ரீஷா மற்றும் நிதின் ஜெய் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மூன்று கட்டங்களாக நடந்த நேர்முகத் தேர்வுகள் மற்றும் இறுதி தகுதி சுற்றுகளின் அடிப்படையில், பிரஜித், அகானாராய், ஜாலி ஜெரின், ஹரிப்பிரியா, ஸ்ரீநிகா, செந்தில்குமார், பவனவி நிகிதா, ரிஷிநந்த், ஹேசல், அதிதி, தீக்ஷா, சித்தேஷ் ஆகிய 12 இளம் பேச்சாளர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.
மாநாட்டில் உரையாற்றிய மாணவர்களுக்கு எஸ்.எஸ்.வி.எம்., பள்ளி மொழி வல்லுநர்கள் மற்றும் சர்வதேச நிபுணர் கேரி ஆகியோர் சிறப்பு பயிலரங்கம் வாயிலாக பயிற்சி அளித்தனர். இதில், 350க்கும் மேற்பட்ட மாணவர்கள் ஒருங்கிணைந்து பங்கேற்றனர்.
கோவை டாக்டர் என்.ஜி.பி., கலை மற்றும் அறிவியல் கல்லூரி ஆங்கிலத்துறை தலைவர் டாக்டர் ஹேசல் வெர்பினா, மாணவர்களின் தன்னம்பிக்கையை பாராட்டி, சான்றிதழ்களை வழங்கி பேசினார். கல்வி நிறுவனங்களின் ஆலோசகர் டாக்டர் சாந்தா மரியா ஜெம்ஸ் நன்றி கூறினார்.
