sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, ஏப்ரல் 18, 2026 ,சித்திரை 5, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் கூட்டணி செயற்குழு கூட்டம்

/

தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் கூட்டணி செயற்குழு கூட்டம்

தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் கூட்டணி செயற்குழு கூட்டம்

தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் கூட்டணி செயற்குழு கூட்டம்


UPDATED : ஏப் 15, 2026 10:50 AM

ADDED : ஏப் 15, 2026 10:50 AM

Google News

UPDATED : ஏப் 15, 2026 10:50 AM ADDED : ஏப் 15, 2026 10:50 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரியில், தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் செயற்குழு கூட்டம் நடந்தது. வட்டார தலைவர் ஹென்றி பவுல்ராஜ் தலைமை வகித்தார். வட்டார செயலாளர் தமிழ்செல்வம் வரவேற்றார்.

கூட்டத்தில், பெண் ஆசிரியர்களை அருகில் உள்ள இடங்களில் பணியமர்த்த வேண்டும் என்ற ஆசிரியர்களின் கோரிக்கையை ஏற்று, அருகாமையில் உள்ள சட்டமன்ற தொகுதிகளில் பணி ஆணை வழங்கிய தேர்தல் ஆணையத்திற்கு நன்றி தெரிவித்துக் கொள்வது, ஓய்வு பெறும் ஆசிரியர்களின் கடைசி பணி நாளில், பள்ளியில் இருந்து வீட்டிற்கு அழைத்து சென்று விடுவது, ஆசிரியர்கள் தேர்தல் பணியை சிறப்புடனும், பாதுகாப்புடனும் செய்து முடிப்பது, தேர்தல் காலத்தில் ஆசிரியர் குறைதீர் கூட்டங்களை நடத்துவது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மாவட்ட செயலாளர் வெங்கடேசன், ஆசிரியர்கள் பணி மேம்பாடு குறித்தும், இயக்கத்தில் ஆசிரியர்கள் பங்கு குறித்தும், பெண் ஆசிரியர்கள் இயக்கப் பணியில் சிறப்பாக செயல்படுவது குறித்தும், வரும் கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கையை ஆசிரியர்கள் சிரத்தையெடுத்து அதிகப்படுத்த பேசினார்.

இதில், மாவட்ட துணைத் தலைவர் மரியசாந்தி, வட்டார செயலாளர் செந்தில்குமார், மாவட்ட மகளிரணி செயலாளர் அனுராதா உட்பட பலர் பங்கேற்றனர். வட்டார பொருளாளர் சாதிக் உசேன் நன்றி கூறினார்.






      Dinamalar
      Follow us