sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, ஏப்ரல் 19, 2026 ,சித்திரை 6, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

அமெரிக்க மையத்தில் மாணவர்களுக்கு இலவச பயிற்சி

/

அமெரிக்க மையத்தில் மாணவர்களுக்கு இலவச பயிற்சி

அமெரிக்க மையத்தில் மாணவர்களுக்கு இலவச பயிற்சி

அமெரிக்க மையத்தில் மாணவர்களுக்கு இலவச பயிற்சி


UPDATED : ஏப் 17, 2026 05:16 PM

ADDED : ஏப் 17, 2026 05:17 PM

Google News

UPDATED : ஏப் 17, 2026 05:16 PM ADDED : ஏப் 17, 2026 05:17 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: சென்னையில் உள்ள அமெரிக்க மையத்தில், வரும் 20 முதல் மே 27ம் தேதி வரை, மாணவர்களுக்கு இலவசமாக கோடை கால பயிற்சி அளிக்கப்பட உள்ளது.

சென்னை கோபாலபுரத்தில் உள்ள அமெரிக்க துாதரகத்தில், அமெரிக்க மையம் செயல்பட்டு வருகிறது. அங்கு, வரும் 20ம் தேதி முதல் மே 27ம் தேதி வரை, 13 முதல் 17 வயது வரையிலான பள்ளி மாணவ, மாணவியருக்கு, இலவச கோடை கால பயிற்சி வகுப்புகளை நடத்த உள்ளது.

இந்த பயிற்சி வகுப்புகள், அமெரிக்காவின் 250வது சுதந்திர தினத்தின் ஒரு பகுதியாக நடத்தப்படுகிறது.

இதில், 'ஸ்டெம்' எனும் அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல், கணிதம் ஆகிய பாடங்களின் செயல்முறை கற்றல் வாயிலாக விளக்கப்பட உள்ளன. 'விண்வெளித் துறையில் அமெரிக்க முன்னேற்றம்' என்ற தலைப்பிலும் வகுப்புகள் நடக்கும்.

இந்த பயிற்சி வகுப்புகள், திங்கள் முதல் வியாழன் வரை, தினமும் காலை 09:30 மணி முதல் பிற்பகல் 01:30 மணி வரை நடத்தப்பட உள்ளன.

வகுப்புகளை கோடிங் கிட்கள், மின்னணு சர்க்கியூட்கள், நாசா லெகோ செட்கள், முப்பரிமான அச்சிடும் கருவிகளின் உதவியுடன் நடத்தப்பட உள்ளது.

வகுப்புகள் முடிந்தபின், வினாடி வினா உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டு, வெற்றி பெறும் மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட உள்ளது.

நிகழ்ச்சியில் பங்கேற்க விரும்பும் மாணவ, மாணவியர், 'ChennaiAMCenter@State.Gov' என்ற மின்னஞ்சல் முகவரியிலோ, 73056 76662 என்ற வாட்ஸாப் எண்ணிலோ முன்பதிவு செய்ய வேண்டும்.







      Dinamalar
      Follow us