தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/சி.பி.எஸ்.இ., தேர்வில் சாதித்த எஸ்.எம்.பி.எம்., பள்ளி

சி.பி.எஸ்.இ., தேர்வில் சாதித்த எஸ்.எம்.பி.எம்., பள்ளி

சி.பி.எஸ்.இ., தேர்வில் சாதித்த எஸ்.எம்.பி.எம்., பள்ளி


UPDATED : ஏப் 20, 2026 10:47 PM

ADDED : ஏப் 20, 2026 10:48 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஏப் 20, 2026 10:47 PM ADDED : ஏப் 20, 2026 10:48 PM


Follow on Google
அ நிறம் | அளவு

திண்டுக்கல்:
திண்டுக்கல் நாடார் உறவின்முறை எஸ்.எம்.பி., மாணிக்கம் நாடார் பாக்கியத்தம்மாள் நேஷனல் பப்ளிக் சி.பி.எஸ்.இ., பள்ளி 10ம் வகுப்பு மாணவர்கள் 158 பேர் தேர்வில் 100 சதவீத தேர்ச்சி அடைந்து சாதனை படைத்தனர்.

மாணவர் நெர்வின் நிதின், ஸ்னோரிஷ் இருவரும் 500க்கு 488 மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் முதல் இடம் பிடித்தனர். மாணவர்கள் தேவ் 487, நித்திலெட்சுமி, நவநீதகோகுல் 486 மதிப்பெண்கள் பெற்றனர்.

தமிழ் மொழிப்பாடம், தகவல் தொழில்நுட்பவியல் பாடத்தில் தலா 3 பேர், அறிவியலில் ஒருவர் என தேர்வு எழுதியவர்களில் 156 பேர் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றனர்.

400க்கு மேல் 99 பேர், 450க்கு மேல் 49 பேர் அதிக மதிப்பெண்கள் பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ளனர். சாதனை படைத்த மாணவர்கள், ஆசிரியர்களுக்கு பள்ளி தாளாளர் ராமதாஸ் வாழ்த்து தெரிவித்தார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us