UPDATED : ஏப் 22, 2026 11:59 AM
ADDED : ஏப் 22, 2026 12:00 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:
எலும்பூரில் துவங்க உள்ள கோடைக்கால இலவச வாலிபால் பயிற்சி முகாமில் சேர சிறுவர், சிறுமியருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
நெல்லை பிரண்ட்ஸ் வாலிபால் கிளப் சார்பில், 42வது ஆண்டு கோடைக்கால இலவச வாலிபால் பயிற்சி முகாம், வரும் 27ம் தேதி, காலை 06:30 மணிக்கு எழும்பூரில் துவங்க உள்ளது.
இதில், 12 முதல் 17 வயதுக்கு உட்பட்ட சிறுவர், சிறுமியர் இருவரும் பங்கேற்கலாம். பங்கேற்க விரும்பும் மாணவர்கள், எழும்பூர் ராதாகிருஷ்ணன் அரங்கில் நேரடியாக பெயர்களை பதிவு செய்யலாம்.
விபரங்களுக்கு, முகாம் ஒருங்கிணைப்பாளரை, 93822 07524 என்ற எண்ணில் தொடர்புக் கொள்ளலாம் என, நெல்லை பிரண்ட்ஸ் வாலிபால் கிளப் தெரிவித்துள்ளது.

