தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/பிர்லா கோளரங்கத்தில் அறிவியல் பயிற்சி முகாம்

பிர்லா கோளரங்கத்தில் அறிவியல் பயிற்சி முகாம்

பிர்லா கோளரங்கத்தில் அறிவியல் பயிற்சி முகாம்


UPDATED : ஏப் 23, 2026 10:52 PM

ADDED : ஏப் 23, 2026 11:06 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஏப் 23, 2026 10:52 PM ADDED : ஏப் 23, 2026 11:06 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சென்னை:
கோட்டூர்புரத்தில் உள்ள பிர்லா கோளரங்கத்தில், மே 5ம் தேதி முதல், பள்ளி மாணவ, மாணவியருக்கான அறிவியல் கண்டுபிடிப்பு பயிற்சி முகாம் நடைபெற உள்ளது.

இது குறித்து, பிர்லா கோளரங்கம் வெளியிட்ட செய்தி குறிப்பு:

பள்ளி மாணவ, மாணவியரிடம் புதிய அறிவியல் கண்டுபிடிப்புகள் தொடர்பான முயற்சிகளை ஊக்கப்படுத்த, கோட்டூர்புரத்தில் உள்ள பிர்லா கோளரங்கத்தில் கோடைக்கால பயிற்சி முகாம் நடைபெற உள்ளது.

அரசு மற்றும் தனியார் பள்ளிகளை சேர்ந்த, 6 முதல் 10ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவியர், மே 5 முதல் 23ம் தேதி வரை நடைபெறும் பயிற்சியில் பங்கேற்கலாம்.

ரோபோடிக்ஸ், 3டி பிரின்டிங், செயற்கை நுண்ணறிவு பயிற்சி, ஆர்டுயினோ ரோபோடிக்ஸ் மற்றும் ட்ரோன், போல்ட்ஸ்கோப், ராக்கெட் தயாரிப்பு, தொலைநோக்கு பயிற்சி மற்றும் அறிவியல் முகாம் ஆகியவை நடைபெற உள்ளன.

ஒவ்வொரு பயிற்சியும், இரண்டு நாட்கள் நடைபெறும். பயிற்சியின் வகையை பொறுத்து, 600 முதல் 3,000 ரூபாய் வரை கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.

ஒவ்வொரு பயிற்சிக்கும், முதலில் வரும் 5 அரசு பள்ளி மாணவ, மாணவியருக்கு கட்டணம் கிடையாது. முன்பதிவு மற்றும் இது தொடர்பான முழு விபரங்களுக்கு, www.tnstc.tn.gov.in என்ற இணைய தளத்தை அணுக வேண்டும்.

இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.


தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us