வெள்ளியணை அரசு பள்ளியில் மாணவர்களுக்கு விழிப்புணர்வு
வெள்ளியணை அரசு பள்ளியில் மாணவர்களுக்கு விழிப்புணர்வு
UPDATED : ஏப் 25, 2026 11:29 AM
ADDED : ஏப் 25, 2026 11:32 AM
கரூர்:
வெள்ளியணை அரசு தொடக்கப் பள்ளியில், கோடை விடுமுறையை பயனுள்ள வகையில் செலவிட, விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
தலைமை ஆசிரியர் தர்மலிங்கம் தலைமை வகித்தார். 2025 - 26 கல்வியாண்டின் வேலை நாள், கடந்த, 16ம் தேதியுடன் நிறைவு பெற்றதையடுத்து, கோடை விடுமுறை விடப்பட்டுள்ளது.
வெப்பம் அதிகமாக இருப்பதால், வெளிப்புற விளையாட்டுகளின் போது அதிகளவு தண்ணீரை அருந்த வேண்டும், ஆறு, ஏரி, குளம், குட்டை போன்ற நீர் நிலைகளில் குளிக்கச் செல்ல பெற்றோர்கள் அனுமதிக்க வேண்டாம். குடும்பத்தினருடன் சேர்ந்து விளையாடுதல், உணவு அருந்துதல், இசை நிகழ்ச்சிகளை கவனித்தல் போன்ற செயல்களில் ஈடுபட வேண்டும்.
ஆரோக்கியமான கோடை காலத்திற்கேற்ற பாரம்பரிய உணவு வகைகளை உண்ண வேண்டும், நுாலகங்களுக்கு செல்ல வேண்டும், இசை, நடனம், ஓவியம் போன்ற செயல்களில் ஈடுபட வேண்டும், தினமும் இரண்டு வேளை பல் துலக்க வேண்டும், பூச்செடிகள் நட்டு வீட்டு தோட்டத்தை பராமரிக்க செய்தல் போன்ற பயனுள்ள செயல்பாடுகள் குறித்து வலியுறுத்தப்பட்டுள்ளது.
மாணவர்களுக்கான விழிப்புணர்வை ஆசிரியர்கள் மனோகர், வாசுகி, மகேஸ்வரி, சசிகலா ஆகியோர் ஏற்படுத்தினர்.

