ஈச்சனாரி கற்பகம் மருத்துவ கல்லுாரியில் பட்டமளிப்பு
ஈச்சனாரி கற்பகம் மருத்துவ கல்லுாரியில் பட்டமளிப்பு
UPDATED : ஏப் 27, 2026 06:32 PM
ADDED : ஏப் 27, 2026 06:35 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈச்சனாரி:
ஈச்சனாரி கற்பகம் மருத்துவக் கல்லூரியின் பட்டமளிப்பு விழா, முதல்வர் டாக்டர் சாந்தா தலைமையில் நடந்தது.
பட்டமளிப்பு விழாவில் இந்திய விமானப்படையின் மருத்துவ சேவைகள் தலைமை இயக்குனர் ஏர் மார்ஷல் டாக்டர் சந்தீப் தரேஜா சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். 163 இளங்கலை மருத்துவர்களுக்கும், 10 முதுகலை மருத்துவர்களுக்கும் பட்டங்களை வழங்கி கவுரவித்தார்.
பல்கலை அளவில் அதிக மதிப்பெண் பெற்ற 27 மருத்துவர்களுக்கு விருதுகளும், பதக்கங்களும் வழங்கி கவுரவிக்கப்பட்டது. கற்பகம் கல்வி நிறுவனங்களின் தலைவர் வசந்தகுமார், முதன்மை செயல் அலுவலர் முருகையா, துணை முதல்வர் டாக்டர் நிர்மலா, மருத்துவ இயக்குனர் கர்னல் டாக்டர் வெங்கடேசன், ஆர்.எம்.ஓ., டாக்டர் ஆகியோர் பங்கேற்றனர்.

