தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/விளையாட்டு விடுதி சேர்க்கை இணையத்தில் விண்ணப்பிக்கலாம்

விளையாட்டு விடுதி சேர்க்கை இணையத்தில் விண்ணப்பிக்கலாம்

விளையாட்டு விடுதி சேர்க்கை இணையத்தில் விண்ணப்பிக்கலாம்


UPDATED : ஏப் 29, 2026 05:55 PM

ADDED : ஏப் 29, 2026 05:57 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஏப் 29, 2026 05:55 PM ADDED : ஏப் 29, 2026 05:57 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி மாவட்ட பள்ளி மாணவ, மாணவியருக்கான விளையாட்டு விடுதி சேர்க்கைக்கு இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என, மாவட்ட கலெக்டர் தினேஷ்குமார் கூறியுள்ளார்.

இது குறித்து, அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:நடப்பாண்டிற்கான தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், விளையாட்டு விடுதி, மற்றும் முதன்மை நிலை விளையாட்டு மையங்களில் பள்ளி மாணவ, மாணவியருக்கான சேர்க்கைக்கு இணையவழியில் விண்ணப்பிக்கலாம்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் விளையாட்டில் சிறந்து விளங்கும் மற்றும் ஆர்வமுள்ள மாணவ, மாணவியர் விளையாட்டு விடுதி மாணவர் சேர்க்கைக்கான ஆன்லைன் விண்ணப்பப் படிவத்தை, www.sdat.tn.gov.in என்ற இணையதள முகவரியில் வரும் மே 3க்குள் விண்ணப்பிக்கலாம்.

தடகளம் மற்றும் குழு விளையாட்டு பிரிவு மாணவர்களுக்கு வரும், மே, 7ல் காலை, 07:00 மணிக்கும், மாணவியருக்கு வரும், மே, 8ம் தேதியிலும் தேர்வுகள் நடக்கும். போட்டிகளில் கலந்து கொள்ள வருபவர்கள், ஆதார் அட்டை (நகல்), பிறப்புச் சான்றிதழ் (நகல்), விளையாட்டு சான்றிதழ்கள் மற்றும் பள்ளியில் பயிலுவதற்கான ஆவணம் சமர்ப்பிக்க வேண்டும். இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.


தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us