sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், மே 04, 2026 ,சித்திரை 21, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

சாரதா கங்காதரன் கல்லுாரி ஆண்டு விழா

/

சாரதா கங்காதரன் கல்லுாரி ஆண்டு விழா

சாரதா கங்காதரன் கல்லுாரி ஆண்டு விழா

சாரதா கங்காதரன் கல்லுாரி ஆண்டு விழா


UPDATED : மே 02, 2026 04:13 PM

ADDED : மே 02, 2026 04:14 PM

Google News

UPDATED : மே 02, 2026 04:13 PM ADDED : மே 02, 2026 04:14 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி:
சாரதா கங்காதரன் கல்லுாரியில் 25வது ஆண்டு விழா வெள்ளி விழாவாக கொண்டாடப்பட்டது.

கல்லுாரி துணைத் தலைவர் பழனி ராஜா துவக்க உரையாற்றினார். கல்லுாரி முதல்வர் பாபு ஆண்டு அறிக்கை வாசித்தார். சிறப்பு விருந்தினர்களாக புதுச்சேரி பல்கலைக்கழக மேலாண்மை துறை பேராசிரியர் சாருமதி, திருவாரூர் தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் வேல்முருகன் ஆகியோர் பங்கேற்று பேசினர்.

விழாவையொட்டி, கல்லுாரி மாணவர்களுக்கு தமிழ், ஆங்கிலம், ஹிந்தி மற்றும் பிரெஞ்சு மொழிகளில் கவிதை, பேச்சு, கட்டுரை உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் மற்றும் பதக்கம் வழங்கப்பட்டது.

தொடர்ந்து 2025-26 கல்வி ஆண்டுக்கான கல்வியில் முதலிடம் பெற்ற முதுகலை கணிணி அறிவியல் இரண்டாம் ஆண்டு மாணவி ஷர்மிளா, விளையாட்டில் முதலிடம் பெற்ற இளங்கலை ஆங்கிலத்துறை 3ம் ஆண்டு மாணவர் ராஜ கணபதி, முதுகலை கணிதவியல் 2ம் ஆண்டு மாணவி ஸ்ரீநிவி ஆகியோருக்கு விருதுகள் மற்றும் பதக்கங்கள் வழங்கப்பட்டது.

கல்லுாரி தேசிய மாணவர் படை மாணவர் நித்தியன் டில்லியில் நடந்த குடியரசு தின அணி வகுப்பில் பங்கேற்று, சாதனை நிகழ்த்தியதற்காக பரிசு வழங்கப்பட்டது. முன்னதாக கல்லுாரி துணைத் தலைவர் பழனி ராஜா தாயார் வனஜா அம்மையாரின் நினைவாக கல்வி வளாகம் கட்டுவதற்காக அடிக்கல் நாட்டப்பட்டது. மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடந்தது.







      Dinamalar
      Follow us