sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/கிருஷ்ணசாமி மகளிர் கல்லுாரியில் பட்டமளிப்பு விழா

கிருஷ்ணசாமி மகளிர் கல்லுாரியில் பட்டமளிப்பு விழா

கிருஷ்ணசாமி மகளிர் கல்லுாரியில் பட்டமளிப்பு விழா


UPDATED : மே 04, 2026 07:07 PM

ADDED : மே 04, 2026 07:18 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மே 04, 2026 07:07 PM ADDED : மே 04, 2026 07:18 PM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

கடலுார்:
கடலுார் கிருஷ்ணசாமி மகளிர் கலை, அறிவியல் மற்றும் மேலாண்மையியல் கல்லுாரியில் 15 மற்றும் 16வது பட்டமளிப்பு விழா, சிவராமகிருஷ்ணன் நினைவரங்கில் நடந்தது.

கல்லுாரி தாளாளர் டாக்டர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். கல்லுாரி செயலாளர் விஜயகுமார் முன்னிலை வகித்தார்.

கல்லுாரி முதல்வர் நிர்மலா பட்டமளிப்பு விழா அறிக்கை வாசித்தார். அண்ணாமலை பல்கலைக்கழக பதிவாளர் சிங்காரவேல், சிறப்பு விருந்தினராக பங்கேற்று 995 மாணவிகளுக்கு பட்டம் வழங்கினார்.

பல்கலைக்கழக தரவரிசையில் முதலிடம் பிடித்த மூன்று மாணவிகளுக்கு சான்றிதழுடன் ரொக்கப்பரிசு, தங்கப்பதக்கம் மற்றும் துறை வாரியாக முன்னுரிமை பெற்ற 29 மாணவிகளுக்கு சான்றிதழுடன், ரொக்கப்பரிசு வழங்கப்பட்டது.

விழாவில் முதன்மை செயல் இயக்குனர் டாக்டர் கண்ணன், கிருஷ்ணசாமி ரெட்டியார் கல்வி அறக்கட்டளை நிர்வாகிகள் மற்றும் ஒருங்கிணைப்பாளர்கள் கீதா, ஹேமலதா, சிவசங்கரி, தீபா, கலைவாணி ஆகியோர் விழா ஏற்பாடுகளை செய்திருந்தனர். புள்ளியியல் துறைத்தலைவர் பூர்ணிமா நன்றி கூறினார்.



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us