UPDATED : மே 10, 2026 07:37 PM
ADDED : மே 10, 2026 07:38 PM
கமுதி:
கமுதி அருகே பேரையூர் நம்மாழ்வார் வேளாண்மை மற்றும் தொழில்நுட்ப கல்லுாரியில் சித்திரை உணவு திருவிழா நடந்தது.
கல்லுாரியில் தலைவர் அகமதுயாசின் தலைமை வகித்தார். முதல்வர் ராமர், தாசில்தார்கள் ராமமூர்த்தி, சிக்கந்தர் பபிதா, இன்ஸ்பெக்டர் ஜெகதீசன், உணவு பாதுகாப்பு அதிகாரி சக்தீஸ்வரன் முன்னிலை வகித்தனர்.
துணை முதல்வர் திருவேணி வரவேற்றார். மாணவர்கள் தலா 6 பேர் வீதம் 15 குழுக்களாக பிரிக்கப்பட்டு தமிழகத்தின் பாரம்பரிய பழமையான சைவ, அசைவ இயற்கை உணவு வகைகளை காஸ் இல்லாமல் விறகு அடுப்பில் சமையல் செய்து பொதுமக்கள் பார்வைக்கு காட்சிப்படுத்தினர்.
குதிரைவாலி கஞ்சி, அவல் பாயாசம், சாமை தயிர் சாதம், மீன் அடை, மீன் புட்டு உட்பட பாரம்பரிய உணவு வகைகள் சமைக்கப்பட்டுள்ளது. சிறப்பாக உணவுகளை சமைத்த குழுவினருக்கு முதல் பரிசாக ரூ.8000, 2ம் பரிசு ரூ.5000, 3ம் பரிசு ரூ.3000 வழங்கப்பட்டது. பேராசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்றனர்.
