சேரிபாளையம் அரசுப்பள்ளிக்கு முன்னாள் மாணவர்கள் உதவி
சேரிபாளையம் அரசுப்பள்ளிக்கு முன்னாள் மாணவர்கள் உதவி
UPDATED : மே 13, 2026 06:26 PM
ADDED : மே 13, 2026 06:27 PM
பொள்ளாச்சி:
பொள்ளாச்சி அருகே, நெகமம் சேரிபாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியில், 2005-07ம் ஆண்டு படித்த முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது. பள்ளி தலைமையாசிரியை மோகனசுந்தரி தலைமை வகித்தார்.
பணி நிறைவு பெற்ற ஆசிரியர்கள் பழனிசாமி, சரவணன், அங்குராஜ், வடிவேல் ஆகியோருக்கு முன்னாள் மாணவர்கள் வரவேற்பு கொடுத்து, அவர்களது பணிகளை பாராட்டி பேசினர். அவர்களுக்கு நினைவு பரிசும் வழங்கப்பட்டது.
அதன்பின் நடந்த கலந்துரையாடலில், முன்னாள் மாணவர்கள், ஆசிரியர்கள் பள்ளி அனுபவங்களை பகிர்ந்து கொண்டு, பள்ளி வளர்ச்சிக்கான திட்டங்கள் குறித்தும் பேசினர்.
பள்ளியில் சில வசதிகளை மேம்படுத்த, முன்னாள் மாணவர்கள் சார்பில், 40 ஆயிரம் ரூபாய் ஒப்படைக்கப்பட்டது. பள்ளி வளர்ச்சிக்கான திட்டங்களை செயல்படுத்தவும், படிக்கும் மாணவர்களுக்கு உதவவும், குறிப்பிட்ட கால இடைவெளியில் சந்திப்பு நிகழ்ச்சி நடத்துவது உள்ளிட்ட தீர்மானிக்கப்பட்டது.
