பாப்பிரெட்டிப்பட்டி அரசு கல்லுாரியில் மாணவர் சேர்க்கை
பாப்பிரெட்டிப்பட்டி அரசு கல்லுாரியில் மாணவர் சேர்க்கை
UPDATED : மே 16, 2026 06:32 PM
ADDED : மே 16, 2026 06:37 PM
பாப்பிரெட்டிப்பட்டி:
பாப்பிரெட்டிப்பட்டி அரசு கலைக் கல்லூரி முதல்வர் ரவி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
பாப்பிரெட்டிப்பட்டி அரசு கலைக் கல்லூரியில், 2026-27 கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. பிளஸ் 2 தேர்ச்சி பெற்ற மாணவர்கள் http://tngasa.in என்ற இணையதள முகவரியில் கல்லூரி குறியீட்டு எண், 10 310 18 பயன்படுத்தி வரும் 29ம் தேதி வரை சேர்க்கைக்கான விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்யலாம்.
இக்கல்லூரியில் பி.ஏ., தமிழ், ஆங்கிலம், சமூகவியல், பி.காம்., வணிகவியல், பி.எஸ்.சி., கணிதம் இயற்பியல், (தமிழ் வழி) கம்ப்யூட்டர் சயின்ஸ் ஆகிய பாடங்களில் சேர இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். இதற்காக கல்லூரியில் செயல்படும் உதவி மையம் மூலம் காலை 10:00 முதல் மாலை 05:00 மணி வரை மாணவர்கள் நேரடியாக வந்து விண்ணப்பிக்கலாம்.
10, 11 மற்றும் பிளஸ் 2 மதிப்பெண் சான்றிதழ், சாதி சான்றிதழ், ஆதார் அட்டை மற்றும் 2 பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம், மின்னஞ்சல் முகவரியுடன் வர வேண்டும். விண்ணப்ப கட்டணம், 48 ரூபாய் மற்றும் பதிவு கட்டணம், 2 ரூபாய். எஸ்.சி., எஸ்.டி, மாணவர்களுக்கு விண்ணப்ப கட்டணம் இல்லை. பதிவு கட்டணம், 2 ரூபாய் மட்டும் செலுத்த வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
