தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவித்தொகை

படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவித்தொகை

படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவித்தொகை


UPDATED : மே 20, 2026 06:27 PM

ADDED : மே 20, 2026 06:28 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மே 20, 2026 06:27 PM ADDED : மே 20, 2026 06:28 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள், அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள், வேலைவாய்ப்பற்றோர் உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து கலெக்டர் பிரசாந்த் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:


கள்ளக்குறிச்சி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய அலுவலகத்தில் நடப்பாண்டு ஏப்.,1 ம் தேதி துவங்கிய காலாண்டிற்கு படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை வழங்குவதற்கான விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன.

பத்தாம் வகுப்பு தோல்வி, தேர்ச்சி மற்றும் அதற்கு மேலான கல்வி தகுதிகளை பெற்றவர்கள், வேலைவாய்ப்பு அலுவகத்தில் பதிவினைத் தொடர்ந்து புதுப்பித்து கடந்த மார்ச் 31ம் தேதி அன்று 5 ஆண்டுகள் நிறைவடைந்த பின், வேலைவாய்ப்பின்றி காத்திருக்கும் இளைஞர்களுக்கு உதவித்தொகை வழங்கப்படகிறது.

இத்திட்டத்தின்கீழ் பயன்பெற மனுதாரரின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.72,000க்கு மிகாமல் இருக்க வேண்டும். மேலும் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மனுதாரர்கள் வரும் ஜூன் 30 அன்று 45 வயதிற்குள்ளும், இதர இனத்தை சார்ந்தவர்கள் 40 வயதிற்குள்ளும் இருக்க வேண்டும்.

மாதந்தோறும் 10ம் வகுப்பு தோல்விக்கு ரூ.200, தேர்ச்சிக்கு ரூ.300, மேல்நிலைக் கல்வி தேர்ச்சிக்கு ரூ.400, பட்டப்படிப்பு தேர்ச்சிக்கு ரூ.600, மாற்றுத்திறனாளிகள் 10ம் வகுப்பு வகுப்பு தோல்வி, தேர்ச்சி இரண்டுக்கும் ரூ.600, மேல்நிலை கல்வி தேர்ச்சிக்கு ரூ.750, மற்றும் பட்டப்படிப்பு தேர்ச்சிக்கு ரூ.1000 வழங்கப்படவுள்ளது.

உதவித்தொகை விண்ணப்பப்படிவம் பெற விரும்புவோர், தங்களின் வேலைவாய்ப்பு அடையாள அட்டையினை ஆதாரமாக காண்பித்து, கள்ளக்குறிச்சி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழி காட்டும் மையம் அலுவல கத்தில் விண்ணப்பங்களை இலவசமாக பெற்றுக் கொள்ளலாம். https://employmentexchange.tn.gov.in/ என்ற இணையதள முகவரியிலும் விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். ஏற்கனவே உதவித் தொகை பெறுபவர்கள் விண்ணப்பிக்க தேவையில்லை.

உதவித்தொகைக்கான விண்ணப்பங்களை வரும் ஜூன் 30 தேதி வரை அனைத்து அலுவலக வேலை நாட்களிலும், கள்ளக்குறிச்சி நேப்பால் தெருவில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில், அனைத்து அசல் கல்வி சான்றிதழ்கள், வேலைவாய்ப்பு அடையாள அட்டை மற்றும் தேசியமய மாக்கப்பட்ட வங்கிக் கணக்குப் புத்தகத்துடன் நேரில் சமர்ப்பிக்கலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us