sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/கந்தசாமி மெட்ரிக் பள்ளி மாணவர்கள் அபாரம்

கந்தசாமி மெட்ரிக் பள்ளி மாணவர்கள் அபாரம்

கந்தசாமி மெட்ரிக் பள்ளி மாணவர்கள் அபாரம்


UPDATED : மே 22, 2026 05:03 PM

ADDED : மே 22, 2026 05:04 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மே 22, 2026 05:03 PM ADDED : மே 22, 2026 05:04 PM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

பொள்ளாச்சி:
ஆனைமலை, கணபதிபாளையம் கந்தசாமி மெட்ரிக் பள்ளியில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில், தேர்வு எழுதிய 99 மாணவர்களும் தேர்ச்சி பெற்று, பள்ளியானது, 100 சதவீதம் தேர்ச்சி பெற்றது.

மாணவி தனுஸ்ரீ, 493 மதிப்பெண் பெற்று முதலிடமும், மாணவர் தருண், 490 மதிப்பெண் பெற்று இரண்டாமிடமும், தரணிஷ், கவினா ஆகியோர் தலா 489 மதிப்பெண் பெற்று மூன்றாவது இடம் பெற்றனர்.

கணிதத்தில், தனுஸ்ரீ, தருண், தரணிஷ், தருண் கிருஷ்ணன், ரூபேஷ் என ஐந்து பேரும்; அறிவியலில், தனுஸ்ரீ, தருண் கிருஷ்ணன், தர்ஷனா, தர்ஷன், ஸ்ரீ சரண், மனோஜ் ஆகியோரும்; சமூக அறவியலில், தரணிஷ், ரத்தின பிரபா ஆகியோர் 100 மதிப்பெண்கள் பெற்றனர். 35 மாணவர்கள், 450க்கு மேலும், 56 மாணவர்கள், 400க்கு மேலும் பெற்றனர்.

பள்ளியின் சார்பில் முதல் ஐந்து இடம் பெற்ற மாணவர்களை பள்ளி முதல்வர் சண்முகம், செயலர் உமா மகேஸ்வரி, ஒருங்கிணைப்பாளர் ரவிச்சந்திரன் ஆகியோர் நினைவு பரிசு வழங்கி பாராட்டினர். தேர்வு எழுதிய அனைத்து மாணவர்களுக்கும் வாழ்த்து தெரிவித்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us