UPDATED : மே 22, 2026 05:08 PM
ADDED : மே 22, 2026 05:08 PM
விருத்தாசலம்:
வி.ஐ.டி., மேல்நிலைப் பள்ளி, 10ம் வகுப்பு மாணவர்கள், பொதுத்தேர்வில் சாதனை படைத்துள்ளனர்.
விருத்தாசலம் வி.ஐ.டி., மேல்நிலைப் பள்ளியில், 10ம் வகுப்பு பொதுத்தேர்வினை 195 மாணவர்கள் எழுதினர். அதில், மாணவர் கோபிநாத் 491; மாணவர் கவினேஷ் 489; மாணவி சந்தியா 488 மதிப்பெண் பெற்றுள்ளனர்.
மேலும், தேர்வு எழுதி ய 195 மாணவர்களில் 17 மாணவர்கள் 450 மதிப்பெண்களுக்கு மேல், 79 மாணவர்கள் 400 மதிப்பெண்களுக்கு மேல் பெற்று சாதனை படைத்துள்ளனர்.
கணித பாடத்தில் 3 மாணவர்கள், அறிவியல் பாடத்தில் 1 மாணவர் என மொத்தம் 4 மாணவர்கள், 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.
கல்விக்குழும தலைவர் பத்மாவதி சக்திவேல், செயலாளர் இந்திரா வீர ராகவன், பொருளாளர் கீர்த்திகா ராஜகோபால், தலைமை ஆசிரியர் பிரபாகரன் மற்றும் உதவி தலைமை ஆசிரியர்கள் ஆகியோர் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு சால்வை அணிவித்து, வாழ்த்து தெரிவித்தனர்.
மேலும், மாணவர்கள், பெற்றோர் மற்றும் ஆசிரியர்கள், அலுவலர்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.
