sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/திறந்தவெளி பள்ளியில் படிக்க விண்ணப்பங்கள் வரவேற்பு

திறந்தவெளி பள்ளியில் படிக்க விண்ணப்பங்கள் வரவேற்பு

திறந்தவெளி பள்ளியில் படிக்க விண்ணப்பங்கள் வரவேற்பு


UPDATED : மே 22, 2026 05:23 PM

ADDED : மே 22, 2026 05:25 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மே 22, 2026 05:23 PM ADDED : மே 22, 2026 05:25 PM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி:
திறந்தவெளி பள்ளியில் படிப்பதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

இது குறித்து, புதுச்சேரி மாவட்ட ஆசிரியர் கல்வி பயிற்சி நிறுவன முதல்வர் ராமகிருஷ்ணன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:


2026-27ம் ஆண்டுக்கான தேசிய திறந்தவெளிப் பள்ளியில் (அங்கீகாரத்துடன்) படிப்பதற்கு வரும் 25ம் தேதி, லாஸ்பேட்டை மாவட்ட ஆசிரியர் கல்வி பயிற்சி நிறுவனத்தில் விண்ணப்பங்கள் வழங்கப்பட உள்ளது.

அடிப்படை கல்வி தகுதி இல்லாதவர்களுக்கு ( ஓ.பி.சி.சி., லெவல்) 8ம் வகுப்பு அடிப்படை கல்வி சான்றிதழ் படிப்பு, அடிப்படை கல்வி தகுதியுடைய அல்லது எழுத படிக்க தெரிந்தவர்களுக்கு (இரண்டாவது லெவல்) எனப்படும் 10ம் வகுப்பு சான்றிதழ் படிப்பு படிக்கலாம்.

பிளஸ் 1 வகுப்பில் தோல்விடைந்த மாணவர்கள் ஓராண்டு வீணாகாமல் நேரடியாக பிளஸ் 2 வகுப்பில் சேர்ந்து படிக்கலாம். 10ம் வகுப்பு தேர்ச்சி அடைந்தவர்கள் நேரடியாக (17 வயதுக்கு மேற்பட்டவர்கள் பிளஸ் 2 வகுப்பு படிக்கலாம்)

மாணவர்கள் பெறும் இந்த சான்றிதழ்கள் மத்திய அரசின், கல்வி அமைச்சகத்தின் கீழ் இயங்கும் தேசிய திறந்தவெளி கல்வி நிறுவனத்தால் வழங்கப்படுகிறது. இந்த சான்றிதழ்களை பெற்ற மாணவர்கள் எந்த ஒரு உயர்படிப்பை அனைத்து பல்கலைக்கழகம் மற்றும் கல்லுாரிகளில் படிக்கலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us