sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/தமிழக ஆசிரியருக்கு பிரதமர் மோடி பாராட்டு

தமிழக ஆசிரியருக்கு பிரதமர் மோடி பாராட்டு

தமிழக ஆசிரியருக்கு பிரதமர் மோடி பாராட்டு


UPDATED : ஜூன் 01, 2026 10:03 AM

ADDED : ஜூன் 01, 2026 10:04 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூன் 01, 2026 10:03 AM ADDED : ஜூன் 01, 2026 10:04 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

புதுடில்லி:
தமிழகத்தை சேர்ந்த ஆசிரியர் கிரிஜாவை மன் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பாராட்டினார்.

அவர் கூறியதாவது:

சமீபத்தில் தமிழகத்தின் நாகர்கோவிலில், நான் ஒரு ஆசிரியரைச் சந்தித்தேன். அவரை நான் ஏறக்குறைய 30 ஆண்டுகளுக்கு முன்பும் சந்தித்திருந்தேன். நான் குறிப்பிடுவது கிரிஜா அம்மாவைத் தான். இந்தச் சந்திப்பின் போது, ​​பல இளம் மாணவர்களும் அவருடன் உடனிருந்தனர். கிரிஜா அம்மா ஏறக்குறைய 15 பள்ளிகளை நிர்வகித்து வருகிறார்.

அவற்றுள், சென்னையில் அமைந்துள்ள ஒரு பள்ளி முதன்மையான கல்வி நிறுவனமாகத் திகழ்கிறது. அவரது தேசபக்தி உணர்வு, ஒவ்வொரு இந்தியருக்கும் உண்மையிலேயே ஊக்கமளிப்பதாக உள்ளது. மன் கி பாத் நிகழ்ச்சியிலிருந்து உத்வேகம் பெற்ற கிரிஜா அம்மா, நாட்டின் வீரர்களின் நலனுக்காகத் தானும் பங்களிக்க வேண்டும் என்று உறுதியேற்றார். அந்த நோக்கத்தை முன்னிட்டு, தனது பள்ளிகள் அனைத்திலும் பயிலும் மாணவர்களை இதில் பங்கேற்குமாறு அவர் ஊக்கப்படுத்தினார்.

ஒவ்வொரு குழந்தையும் தினமும் ஒரு ரூபாய் வீதம் பங்களிக்க வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார். ஓராண்டு காலத்தில், ஒவ்வொரு மாணவரும் 365 ரூபாயைப் பங்களித்தனர். இத்தகைய சிறிய முயற்சியால் ஏறக்குறைய 40 லட்சம் ரூபாய் திரட்டப்பட்டது. இந்த முழுத் தொகைக்குமான காசோலை ஒன்றை, கிரிஜா அம்மா என்னிடம் ஒப்படைத்தார். அவருடன் நான் உரையாடிய போது தான், இந்தியா மீது அவருக்குள்ள பக்தி எவ்வளவு பெரியது என்பதை நான் உணர்ந்து கொண்டேன்.

இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.


தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us