UPDATED : ஜூன் 02, 2026 10:30 AM
ADDED : ஜூன் 02, 2026 10:31 AM
அ நிறம் | அளவு
சென்னை:
தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர்., மருத்துவ பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் நாராயணசாமியின் பதவிக்காலம் நிறைவடைந்ததை அடுத்து, புஷ்கலா பொறுப்பு துணைவேந்தராக நியமிக்கப்பட்டு உள்ளார்.
சென்னை, கிண்டியில் உள்ள தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர்., மருத்துவ பல்கலைக்கழகத்தின், 11வது துணை வேந்தராக கே.நாராயணசாமி, 2023ல் நியமிக்கப்பட்டார்.
துணைவேந்தர் பதவி காலம் மூன்று ஆண்டுகள் என்பதால், அவரது பதவி காலம் நேற்று முன்தினம் நிறைவடைந்தது.
இதையடுத்து, பல்கலையின் நோய் எதிர்ப்பியல் துறை தலைவர் எஸ்.புஷ்கலாவை பொறுப்பு துணைவேந்தராக செயல்பட, மருத்துவ பல்கலை ஆட்சிமன்ற குழு ஒப்புதல் அளித்துள்ளது. அவர், நேற்று அப்பொறுப்பை ஏற்றுக்கொண்டார்.
