சுகாதார ஆய்வாளர்களுக்கான பணியிட மாறுதல் கலந்தாய்வு
சுகாதார ஆய்வாளர்களுக்கான பணியிட மாறுதல் கலந்தாய்வு
UPDATED : ஜூன் 03, 2026 08:35 PM
ADDED : ஜூன் 03, 2026 08:36 PM
விருதுநகர்:
பொது சுகாதாரத் துறையில் பணிபுரியும் சுகாதார ஆய்வாளர்களுக்கான பணியிட மாறுதல் கலந்தாய்வு ஜூன் 23, 24ல் நடக்கிறது.
தி.மு.க., ஆட்சி முடியும் தருவாயில் மருத்துவ பணிகள் தேர்வு வாரியத்தால் 1429 சுகாதார ஆய்வாளர்கள் பணியிடங்களுக்கு தேர்வு முடிக்கப்பட்டு, பணியிட தேர்வு கலந்தாய்வு நடத்தப்பட்டது.
ஆனால் விண்ணப்பதாரர்களில் சிலர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்ததால் பணியிடங்களை நிரப்ப முடியாத நிலை ஏற்பட்டது. தற்போது பணியில் உள்ள சுகாதார ஆய்வாளர்களுக்கு ஆண்டுதோறும் பணியிடமாறுதல் கலந்தாய்வு நடத்தப்படுவது வழக்கம்.
இவர்களுக்கு நடப்பாண்டுக்கான பணியிடமாற்றம் கலந்தாய்வுக்கு திட்டமிடப்பட்டு இம்மாதம் 23, 24ல் நடக்கிறது. இதற்கான சுற்றறிக்கை அந்தந்த மாவட்ட சுகாதார அலுவலகங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது.
