sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/முதல்வர் இளைஞர் விருது விண்ணப்பிக்க அழைப்பு

முதல்வர் இளைஞர் விருது விண்ணப்பிக்க அழைப்பு

முதல்வர் இளைஞர் விருது விண்ணப்பிக்க அழைப்பு


UPDATED : ஜூன் 08, 2026 01:07 PM

ADDED : ஜூன் 08, 2026 01:08 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூன் 08, 2026 01:07 PM ADDED : ஜூன் 08, 2026 01:08 PM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

சென்னை:
முதல்வர் மாநில இளைஞர் விருதுக்கு விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

சமுதாய வளர்ச்சிக்கு தன்னார்வ தொண்டாற்றி வரும் இளைஞர்களை கவுரவிக்கும் வகையில், தமிழக அரசால் ஆண்டுதோறும் சுதந்திர தினத்தன்று 'முதல்வர் மாநில இளைஞர் விருது' வழங்கப்படுகிறது

அந்தவகையில், இந்தாண்டிற்கான விருதுக்கு, 15 முதல் 35 வயதுக்கு உட்பட்ட, தலா மூன்று ஆண்கள் மற்றும் பெண்கள் தேர்வு செய்யப்பட உள்ளன. சுதந்திர தின விழாவில் விருதுகள் வழங்கப்படும்.

இதற்கு, 2025 ஏப்., 1 முதல் 2026 மார்ச் 31 வரை மேற்கொண்ட சமூக சேவைகள் மட்டுமே பரிசீலனை செய்யப்படும். விண்ணப்பதாரர்கள் குறைந்தது ஐந்து ஆண்டுகள் தமிழகத்தில் வசித்திருக்க வேண்டும்.

அரசு, பொதுத்துறை நிறுவனங்கள், பல்கலை, கல்லுாரி, பள்ளிகளில் பணியாற்றுவோர் விருதுக்கு விண்ணப்பிக்க இயலாது. விண்ணப்பங்களை தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் www.sdat.tn.gov.in என்ற இணையதளத்தில், ஜூலை 6ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

மேலும், சாதனைகள் மற்றும் சான்றிதழ்களை தொகுத்து மாவட்ட விளையாட்டு அலுவலரிடம் வழங்க வேண்டும். மேலும் விபரங்களுக்கு 74017 03480 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என, சென்னை கலெக்டர் மாலதி ஹெலன் தெரிவித்துள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us