UPDATED : ஜூன் 12, 2026 01:15 PM
ADDED : ஜூன் 12, 2026 01:18 PM

உயர் கல்வித்துறை செயலர் அருண்ராய் வெளியிட்டுள்ள அறிவிப்பு:
பாலிடெக்னிக் கல்லுாரிகளில் டிப்ளமா படித்து, செமஸ்டர் தேர்வுகளில் தேர்ச்சி பெறாமல் நிலுவையில் வைத்துள்ள பாடங்களுக்கு மீண்டும் தேர்வு எழுத, 2015 முதல் கடந்தாண்டு வரை, எட்டு முறை வாய்ப்புகள் வழங்கப்பட்டன.
ஆனாலும், 2,000க்கும் மேற்பட்ட மாணவர்கள், 'அரியர்' வைத்துள்ளனர்; மீண்டும் வாய்ப்பு வழங்கும் படி கோரிக்கை விடுத்தனர். அவர்களின் நலன் கருதி, வரும் அக்., மற்றும் 2027 ஏப்ரல் செமஸ்டர்களில் மட்டும், மீண்டும் தேர்வெழுத அனுமதி அளிக்கப்படுகிறது.
இந்த தேர்வுக்கு பதிவு கட்டணமாக 750 ரூபாய், ஒருங்கிணைந்த மதிப்பெண் சான்றிதழ் கட்டணமாக 40 ரூபாய், விண்ணப்ப கட்டணமாக 20 ரூபாய், தேர்வுக் கட்டணமாக ஒவ்வொரு பாடத்துக்கும் 65 ரூபாய் செலுத்த வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
