தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/டெட் தேர்வு பயிற்சி ஆசிரியர்கள் வலியுறுத்தல்

டெட் தேர்வு பயிற்சி ஆசிரியர்கள் வலியுறுத்தல்

டெட் தேர்வு பயிற்சி ஆசிரியர்கள் வலியுறுத்தல்


UPDATED : ஜூன் 12, 2026 07:14 PM

ADDED : ஜூன் 12, 2026 07:15 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூன் 12, 2026 07:14 PM ADDED : ஜூன் 12, 2026 07:15 PM


Follow on Google
அ நிறம் | அளவு

விருதுநகர்:
தமிழகத்தில் சிறப்பு டெட் தேர்வு எழுத ஆன்லைன் பயிற்சி பெறும் துவக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு பயிற்சி கட்டகம்,சிலபஸ் கைடுகளை வழங்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

உச்சநீதிமன்ற உத்தரவுப்படியும், முந்தைய தி.மு.க., அரசின் அறிவிப்பு படியும் ஜூலை 4ல் பேப்பர் 1 சிறப்பு டெட் தேர்வு நடக்கவுள்ளது. இதற்காக மாவட்டங்கள் தோறும் நேரடி பயிற்சி வழங்கப்படும் என முந்தைய அரசு அறிவித்தது. அதைநடைமுறைப்படுத்தாத நிலையில், மாநில கல்வி ஆராய்ச்சி, பயிற்சி கவுன்சில் சார்பில் தினசரி ஆன்லைன் பயிற்சி அளிக்கப்படுகிறது.

இந்நிலையில் தங்களுக்கான பயிற்சி கட்டகத்தை நேரடியாக புத்தகங்கள், கைடுகளாகவழங்கினால் தேர்வுக்கு தயாராவது இன்னும் எளிதாக இருக்கும் என ஆசிரியர்கள் எதிர்பார்க்கின்றனர்.இதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர்.

பயிற்சி கட்டகம்என்பது தேர்வாளர்களுக்கு தேவையான பாடத்திட்டங்கள், செயல்பாடுகள், மதிப்பீட்டு முறைகள், விடைக் குறிப்புகளை உள்ளடக்கியது.

துவக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கான கவுன்சிலிங் ஜூன் 15 முதல் துவங்குகிறது.

டெட் தேர்வால் இது பதவி உயர்வு இல்லாத கவுன்சிலிங்காக மாறிவிட்டதால் ஆசிரியர்கள் அதிருப்தியில் உள்ளனர்.

எனவே அரசு டெட் தேர்வுகளை விரைந்து நடத்தி ஆசிரியர்களை தகுதிப்படுத்துவதோடு, பதவி உயர்வையும் விரைந்து வழங்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us