தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/நீட் மறுதேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு

நீட் மறுதேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு

நீட் மறுதேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு


UPDATED : ஜூன் 15, 2026 11:03 AM

ADDED : ஜூன் 15, 2026 11:03 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூன் 15, 2026 11:03 AM ADDED : ஜூன் 15, 2026 11:03 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுடெல்லி:
மருத்துவப் படிப்பில் சேர 'நீட்' மறுதேர்வுக்கான ஹால் டிக்கெட்டுகளை தேசிய தேர்வு முகமை நேற்று அதிகாரப்பூர்வமாக வெளியிட்டது.

நாடு முழுவதும் கடந்த மே 3ம் தேதி இளநிலை மருத்துவ படிப்புகளில் சேருவதற்கான 'நீட்' நுழைவுத் தேர்வு நடந்தது. இந்த தேர்வின் போது வினாத்தாள் கசிந்ததாக எழுந்த புகாரை அடுத்து, மே 3ம் தேதி நடந்த 'நீட்' நுழைவுத் தேர்வு ரத்து செய்யப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, வரும் ஜூன் 21ம் தேதி மறுதேர்வு நடக்கும் என அறிவிக்கப்பட்டது.

எவ்வித முறைகேடுகளும் நடக்காத வகையில், ராணுவ கட்டுப்பாட்டுடன் மறுதேர்வை நடத்த மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

இந்நிலையில், இதற்கான ஹால் டிக்கெட்டுகளை தேசிய தேர்வு முகமை நேற்று அதிகாரப்பூர்வமாக வெளியிட்டது. தேசிய தேர்வு முகமையின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இருந்து ஹால் டிக்கெட்டுகளை மாணவர்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜூன் 21ம் தேதி நடக்கும் 'நீட்' மறுதேர்வை எழுத நாடு முழுதும் இருந்து 22.79 லட்சம் மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர்.


தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us