தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/நாட்டின் வளர்ச்சிக்கு மாணவர்களின் பங்களிப்பு அவசியம்

நாட்டின் வளர்ச்சிக்கு மாணவர்களின் பங்களிப்பு அவசியம்

நாட்டின் வளர்ச்சிக்கு மாணவர்களின் பங்களிப்பு அவசியம்


UPDATED : ஜூன் 19, 2026 05:59 PM

ADDED : ஜூன் 19, 2026 06:02 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூன் 19, 2026 05:59 PM ADDED : ஜூன் 19, 2026 06:02 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை:
“வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்க, மாணவ, மாணவியர் தங்கள் பங்களிப்பை வழங்க வேண்டும்,” என, தமிழக கவர்னர் ராஜேந்திர அர்லேக்கர் கூறினார்.

வேளச்சேரி குருநானக் கல்லுாரியில் நடந்த, 50வது பட்டமளிப்பு விழாவில், 519 மாணவ, மாணவியருக்கு, பட்டங்கள் வழங்கப்பட்டன.

விழாவில், கவர்னர் ராஜேந்திர அர்லேக்கர் பேசியதாவது:


கடந்த 1836 - 1838 காலக்கட்டத்தில், 95 சதவீதம் பேர் கல்வியறிவு பெற்றிருந்தனர். அப்போது ஆங்கிலேயர்கள் வந்து நம்மை அடிமைப்படுத்த முயன்றனர். நம் கல்வி முறை சீரழிக்கப்பட்டது.

அவர்கள் நம் நாட்டைவிட்டு செல்லும் போது, கல்வியறிவு பெற்றவர்களின் எண்ணிக்கை 22 சதவீதமாக குறைந்தது. இந்தியாவின் கல்வி மரபும், அறிவுசார் பாரம்பரியமும் மீண்டும் வலுப்பெற வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.

தேசிய கல்வி கொள்கை, நாட் டின் மண், கலாசாரம், சமூக தேவைகள், தன்னிறைவு வளர்ச்சியை மையமாக கொண்டுள்ளது.

இக்கல்வி முறை, வேலை தேடுவோரை உருவாக்குவது அல்ல; வேலைவாய்ப்புகளை உருவாக்கும் தொழில் முனைவோரை உருவாக்குவதாகும்.

வரும் 2047ம் ஆண்டில், இந்தியா வளர்ச்சியடைந்த நாடாக அறிவிக்கப்பட வேண்டும் என்பது, பிரதமர் மோடியின் திட்டம். வளர்ந்த தமிழகம், வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்க வழிவகை செய்யும். இதனால் தமிழகத்தின் வளர்ச்சிக்கு மாணவ, மாணவியர், தங்கள் பங்களிப்பை வழங்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us