தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/அண்ணாமலை பல்கலையில் என்.சி.சி., பயிற்சி முகாம்

அண்ணாமலை பல்கலையில் என்.சி.சி., பயிற்சி முகாம்

அண்ணாமலை பல்கலையில் என்.சி.சி., பயிற்சி முகாம்


UPDATED : ஜூன் 19, 2026 06:05 PM

ADDED : ஜூன் 19, 2026 06:06 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூன் 19, 2026 06:05 PM ADDED : ஜூன் 19, 2026 06:06 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சிதம்பரம்:
அண்ணாமலை பல்கலை தேசிய மாணவர் படை பயிற்சி முகாமில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

சிதம்பரம், அண்ணாமலை பல்கலையில், 6 வது தமிழக பட்டாலியன் பிரிவு சார்பில், 10 நாட்கள் தேசிய மாணவர் படை பயிற்சி முகாம் துவக்க நிகழ்ச்சி நடந்தது.

இதில், தமிழக பட்டாலியன் கமாண்டிங் அதிகாரி கர்னல் சக்கரபர்த்தி தலைமை தாங்கி துவக்கி வைத்து பேசினார். நிர்வாக அதிகாரி லெப்டினன்ட் கர்னல் நாராயன் முன்னிலை வகித்தார்.

வரும், 26ம் தேதி வரை 10 நாட்கள் நடைபெறும் முகாமில் துப்பாக்கி சுடுதல், உடல் நலம் மற்றும் சுகாதாரம், புவி வரைபடம் கண்டறிதல், துாரத்தை மதிப்பிடுதல், தடை பயிற்சி ஆகிய பிரிவுகளில் மாணவ, மாணவிகளுக்கு பயிற்சிகள் வழங்கப்படும்.

தொடர்ந்து போட்டிகள் நடத்தப்பட்டு, தேர்வு செய்யப்படும் தேசிய மாணவர் படையினர், அடுத்து நடைபெற உள்ள பயிற்சி முகாமில் பங்கு பெற தேர்வு செய்யப்படுவர்.

முகாமில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இருந்து பள்ளி மற்றும் கல்லுாரி தேசிய படை மாணவ, மாணவிகள் 400 பேர் மற்றும் ராணுவ வீரர்கள், கல்லுாரி மற்றும் பள்ளி தேசிய மாணவர் படை அலுவலர்கள் பங்கேற்றனர்.


தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us