UPDATED : ஜூலை 02, 2026 06:45 PM
ADDED : ஜூலை 02, 2026 06:46 PM
அ நிறம் | அளவு
அரூர்:
பொறியியல் படிப்புகளுக்கான தரவரிசை பட்டியலில், மொரப்பூர் மாணவி முதலிடம் பெற்றுள்ளார்.
தமிழகத்தில் பொறியியல் படிப்புகளுக்கான தரவரிசை பட்டியலை நேற்று உயர்கல்வித்துறை அமைச்சர் விஸ்வநாதன் வெளியிட்டார். இதில், 200க்கு, 200 கட் ஆப் பெற்று, மாநில அளவில் தர்மபுரி மாவட்டம், மொரப்பூர் அடுத்த ஆர்.கோபிநாதம்பட்டியை சேர்ந்த மாணவி அக்ஷிதா முதலிடம் பிடித்துள்ளார்.
இவரது தந்தை சுரேஷ்பாபு அரசு நடுநிலைப்பள்ளியில் பட்டதாரி ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். மாணவி அக்ஷிதா கம்பைநல்லுார் ஸ்ரீராம் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 படித்தார். இவர், பிளஸ் 2 பொதுத்தேர்வில், 600க்கு, 598 மதிப்பெண்கள் பெற்றது குறிப்பிடத்தக்கது.
