UPDATED : ஜூலை 09, 2026 05:44 PM
ADDED : ஜூலை 09, 2026 05:46 PM

மதுரை:
பொது சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருந்துத்துறை சார்பில் ஆரம்ப, நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் (பி.எச்.சி.,), டாக்டர், நர்ஸ் உள்ளிட்ட காலிப்பணியிடங்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் விண்ணப்பிக்கலாம்.
மதுரை மாவட்ட சுகாதார அலுவலகத்தின் கீழ் உள்ள பி.எச்.சி.,கள், மாநகராட்சியின் கீழ் உள்ள நகர்ப்புற பி.எச்.சி.,கள், சுகாதார நலவாழ்வு மையங்களில் காலிப்பணியிடங்களுக்கு ஜூலை 24 க்குள் விண்ணப்பிக்கலாம்.
சுகாதாரம் மற்றும் குடும்ப நல பயிற்சி மைய மருத்துவ அலுவலர் பணி, இடைநிலை சுகாதார வழங்குநர் (எம்.எல்.எச்.பி.,), ஸ்டாப் நர்ஸ், நகர்ப்புற சுகாதார நலவாழ்வு மைய சுகாதார ஆய்வாளர், பல்நோக்கு மருத்துவமனைப் பணியாளர், ஆய்வக நுட்புநர், மருந்தாளுநர், துணை செவிலியர் (ஏ.என்.எம்.,), நகர்ப்புற சுகாதார மேலாளர், பிசியோதெரபிஸ்ட், மொபைல் மெடிக்கல் டிரைவர், கணக்கு உதவியாளர் பணியிடங்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் பணி நியமனம் நடக்கிறது.
இப்பணிகள் அனைத்தும் தற்காலிகமானவை. எந்தக் காலத்திலும் பணி நிரந்தரம் செய்யப்படாது. தேசிய நலச் சங்க தேர்வு விதியின் படி, நேர்முகத் தேர்வு நடத்தப்படும். விருப்பமுள்ளோர் நேரிலோ அல்லது விஸ்வநாதபுரத்தில் உள்ள மாவட்ட சுகாதார அலுவலர் அலுவலகத்திலோ ஜூலை 24க்குள் சமர்ப்பிக்கலாம். போன்:
0452 - 264 0778.
