தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/அரசு பள்ளி மாணவர்கள் விழிப்புணர்வு ஊர்வலம்

அரசு பள்ளி மாணவர்கள் விழிப்புணர்வு ஊர்வலம்

அரசு பள்ளி மாணவர்கள் விழிப்புணர்வு ஊர்வலம்


UPDATED : ஜூலை 30, 2026 05:22 PM

ADDED : ஜூலை 30, 2026 05:24 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 30, 2026 05:22 PM ADDED : ஜூலை 30, 2026 05:24 PM


Follow on Google
அ நிறம் | அளவு

செஞ்சி:
செஞ்சி, ராஜா தேசிங்கு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில், என்.எஸ்,எஸ்., என்.சி.சி., மாணவர்கள் கலந்து கொண்ட மக்கள் தொகை விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. தலைமையாசிரியர் தேவதாஸ் தலைமை தாங்கினார். உதவி தலைமை ஆசிரியர் ராமசாமி வரவேற்றார்.

தாசில்தார் ஏழுமலை ஊர்வலத்தை துவக்கி வைத்தார். இதில் மக்கள் தொகை பெருக்கத்தால் ஏற்படும் பாதிப்புகள், மக்கள் தொகை கணக்கெடுப்பின் அவசியம், பெண் கல்வியின் அவசியம் குறித்தும் மாணவர்கள் பதாகையுடன், கோஷமிட்டபடி காந்தி பஜார், திண்டிவனம் ரோடு வழியாக ஊர்வலம் வந்தனர்.

இதில் சப் இன்ஸ்பெக்டர் வீரமணி, முதுநிலை வருவாய் ஆய்வாளர் செல்வம், என்.எஸ்.எஸ்., திட்ட அலுவலர் ஏழுமலை, கணினி ஆசிரியர் வடிவேல் மற்றும் மாணவர்கள்கலந்து கொண்டனர்.

என்.சி.சி., அலுவலர் குமரவேல் நன்றி கூறினார்.


தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us