தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/மாற்றுத்திறனாளி மாணவர்களுக்காக மருத்துவ கல்லுாரிகளில் மையங்கள்

மாற்றுத்திறனாளி மாணவர்களுக்காக மருத்துவ கல்லுாரிகளில் மையங்கள்

மாற்றுத்திறனாளி மாணவர்களுக்காக மருத்துவ கல்லுாரிகளில் மையங்கள்


UPDATED : ஆக 03, 2026 06:13 PM

ADDED : ஆக 03, 2026 06:14 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 03, 2026 06:13 PM ADDED : ஆக 03, 2026 06:14 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை:
மருத்துவ கல்லுாரிகளில், மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான உதவிகள் வழங்க சிறப்பு வழிகாட்டி மையங்கள் அமைக்க, தேசிய மருத்துவ ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

இது குறித்து, மருத்துவ கல்வி நிறுவனங்களுக்கு ஆணைய செயலர் ராகவ் லங்கர் அனுப்பியுள்ள சுற்றறிக்கை:


மாற்றுத்திறனாளிகள் உரிமை சட்டப்படி, அனைத்து கல்வி நிறுவனங்களும் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு தடையற்ற கற்றல் சூழலையும், தேவையான சிறப்பு வசதிகளையும் செய்து தர வேண்டியது கட்டாயம்.

அதன்படி, அவர்களுக்கான வழிகாட்டி மையங்கள், ஒவ்வொரு கல்லுாரியிலும் அமைப்பது அவசியம்.

மருத்துவக் கல்லுாரிகளில் அமைக்கப்படும் வழிகாட்டி மையங்கள், மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான ஒற்றைச் சாளர உதவி மையமாகச் செயல்படும்.

குறிப்பாக, மருத்துவக் கல்லுாரிகள் மற்றும் அவற்றுடன் இணைந்த மருத்துவமனைகளுக்கு, மாணவர்கள் எளிதாக சென்று வரத் தேவையான வசதிகளை அம்மையம் செய்து தர வேண்டும்.

படிப்பு காலம் மற்றும் மருத்துவப் பயிற்சி காலத்தில், அவர்களுக்கு தேவைப்படும் வசதிகளையும் வழங்குவது அவசியம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us