தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/போட்டி தேர்வுக்கான கட்டணம் இல்லா பயிற்சி

போட்டி தேர்வுக்கான கட்டணம் இல்லா பயிற்சி

போட்டி தேர்வுக்கான கட்டணம் இல்லா பயிற்சி


UPDATED : செப் 04, 2026 04:38 PM

ADDED : செப் 04, 2026 04:40 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : செப் 04, 2026 04:38 PM ADDED : செப் 04, 2026 04:40 PM


Follow on Google
அ நிறம் | அளவு

ஊட்டி:
நீலகிரியில் போட்டி தேர்வுக்கான கட்டணம் இல்லா பயிற்சி வகுப்புகளில் சேர விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

கலெக்டர் லட்சுமி பவ்யா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:


நீலகிரி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் தன்னார்வ பயிலும் வட்டத்தின் வாயிலாக, போட்டி தேர்வுகளுக்கான கட்டணம் இல்லாத, பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகிறது.

இம்மையத்தின் வாயிலாக, மத்திய, மாநில அரசுகளில் பல்வேறு தேர்வு முகமைகளால் அறிவிக்கப்படும் பல்வேறு போட்டி தேர்வுகளுக்கு நிபுணத்துவம் வாய்ந்த பயிற்றுனர்களை கொண்டு ஆண்டு முழுவதும் பயிற்சி அளிக்கப்படுகிறது.

நடப்பு ஆண்டிற்கான புதிய பயிற்றுனர்கள் மத்திய, மாநில போட்டி தேர்வு பாடத்திட்டத்தின் படி, பொது அறிவு, கணிதம், மன திறன், தமிழ், ஆங்கிலம் மற்றும் நடப்பு நிகழ்வுகள் ஆகிய பாடத் தலைப்புகளில் தேர்வு செய்யப்படுவர்.

விருப்பம் உள்ள பயிற்றுனர்கள் தங்களது கல்வி சான்றிதழ்கள், அனுபவ சான்றிதழ் மற்றும் முகவரி சான்றிதழ் ஆகியவற்றின் நகல்களுடன் கூடிய விண்ணப்பத்தை, மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும். தேர்வு செய்யப்படும் பயிற்றுனர்களுக்கு பயிற்சி வகுப்புகளின் அடிப்படையில், வகுப்பு வாரியாக மதிப்பூதியம் வழங்கப்படும்.

இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us