தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/அரசு மருத்துவக் கல்லுாரியில் போக்குவரத்து விழிப்புணர்வு

அரசு மருத்துவக் கல்லுாரியில் போக்குவரத்து விழிப்புணர்வு

அரசு மருத்துவக் கல்லுாரியில் போக்குவரத்து விழிப்புணர்வு


UPDATED : செப் 30, 2026 06:01 PM

ADDED : செப் 30, 2026 06:02 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : செப் 30, 2026 06:01 PM ADDED : செப் 30, 2026 06:02 PM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி:
புதுச்சேரி, கதிர்காமம் இந்திரா காந்தி அரசு மருத்துவக் கல்லுாரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில், மாணவர்களுக்கான சாலைப் போக்குவரத்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று நடந்தது.

நிகழ்ச்சிக்கு போக்குவரத்து எஸ்.பி., ரட்சனா சிங் வரவேற்றார். சீனியர் எஸ்.பி. திவ்யா பங்கேற்று மாணவ, -மாணவிகளுக்குப் போக்குவரத்து விதிகள் மற்றும் சாலை பாதுகாப்பு குறித்த பல்வேறு முக்கிய ஆலோசனைகள் வழங்கினார்.

அதில், மாணவ, மாணவியர்கள் அனைவரும் பைக் மற்றும் ஸ்கூட்டரில் செல்லும்போது, கட்டாயம் ஹெல்மெட் அணிந்து செல்ல வேண்டும். போக்குவரத்து சிக்னல்கள் மற்றும் சாலை பாதுகாப்பு விதிமுறைகளை முழுமையாகப் பின்பற்ற வேண்டும்.

வாகனம் ஓட்டும்போது மொபைல் போனில் பேசுவது, குறுஞ்செய்தி அனுப்புவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். எதிர்கால டாக்டர்களாக உருவெடுக்கும் கல்லுாரி மாணவ, மாணவிகள், சமூகத்தில் மற்றவர்களுக்கு முன்மாதிரியாகத் திகழ்ந்து சாலை பாதுகாப்பு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என அறிவுறுத்தினார்.

இதில், வடக்கு போக்குவரத்து இன்ஸ்பெக்டர் வேலையன், மருத்துவ கல்லுாரி பேராசிரியர்கள், துறைத் தலைவர்கள் மற்றும் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us