அகில இந்திய தொழிற்தேர்வுக்கு தனித்தேர்வர் விண்ணப்பிக்கலாம்
அகில இந்திய தொழிற்தேர்வுக்கு தனித்தேர்வர் விண்ணப்பிக்கலாம்
UPDATED : அக் 05, 2026 03:08 PM
ADDED : அக் 05, 2026 03:09 PM
தர்மபுரி:
தர்மபுரி மாவட்ட கலெக்டர் சரவணன் வெளியிட்டுள்ள அறிக்கை:
அகில இந்திய தொழிற்தேர்வில் தனித்தேர்வராக விண்ணப்பிக்க விரும்புகிறவர்கள், விண்ணப்ப படிவம், முழுவிபரங்கள் அடங்கிய விளக்க குறிப்பேடு மற்றும் தேர்வு கட்டணம் செலுத்துவதற்கான வழிகாட்டுதல் ஆகியவற்றை, www.skilltraining.tn.gov.in என்ற இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும்.
தேர்வு கட்டணம், 200 ரூபாய், www.karuvoolam.tn.gov.in என்ற இணையதளத்தின் மூலம் செலுத்தி, பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை உரிய ஆவணங்களுடன் விளக்க குறிப்பில் குறிப்பிட்டுள்ள, மாவட்ட அரசினர் தொழிற்பயிற்சி நிலைய முதல்வரிடம் சமர்ப்பிக்க வேண்டும்.
தகுதியுள்ள விண்ணப்பதாரர்களுக்கு, முதனிலை தேர்வுக்கான எழுத்துத்தேர்வு, 2026 நவ., 26ம் தேதி கிண்டி அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் நடத்தப்படும். எழுத்துத்தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு மட்டும், செய்முறை தேர்வு, 2026 நவ., 27ம் தேதி நடக்கும்.
இதற்கான முழு வழிகாட்டுதல்கள், www.skilltraining.tn.gov.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம். தனித்தேர்வராக தேர்வு எழுத செப்., 21ம் தேதி முதல், விண்ணப்பிக்கலாம்.
தனித்தேர்வராக விண்ணப்பிக்க அக்., 9 கடைசி தேதி. மேலும், விபரங்களுக்கு தர்மபுரி மாவட்ட திறன் பயிற்சி அலுவலக உதவி இயக்குனர் அலுவலகம் அல்லது 04342 - 288099, 90802 76172 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு, அவர் தெரிவித்தார்.
